Skip to main content

“அவர் திமுகவிற்கு சென்ற பிறகு இங்கே திட்டத்தை நகர்த்த முடியவில்லை” - செங்கோட்டையன் பேச்சு

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

"After going to DMK, even he could not move the project here"-Sengottaiyan's speech

 

ஈரோடு இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதேநேரம் அதிமுக தற்பொழுதுதான் வேட்பாளரை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்  'ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில், “கேட்டதைக் கொடுப்பவனே, கிருஷ்ணா கிருஷ்ணா என்று சொல்வார்கள். அதேபோல் நபிகளை பொறுத்தவரை 'இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை' என்று சொல்வார்கள். இயேசுநாதரை சொல்லும் பொழுது 'தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்' என்று சொல்வார்கள். ஆனால், கேட்காமலே கொடுக்கும் உள்ளங்கள் இங்கே நிறைந்துள்ளது.  எங்களை பொறுத்தவரை இங்கே சொல்வதற்கு ஒன்றே ஒன்றுதான் உள்ளது.

 

எம்ஜிஆர் காலத்தில் இந்த மாவட்டம் பிரிக்கப்பட்டது. ஜெயலலிதா காலத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. அதற்கு பிறகு எடப்பாடியின் ஆட்சியில் சிறந்த முறையில் அமைதியான முறையில் நான்காண்டு காலம் பல்வேறு சோதனைகளுக்கு இடையில் ஆட்சி சீரோடும் சிறப்போடும் அரவணைத்து செல்கின்ற ஆட்சியாக இருந்தது. நீங்கள் எல்லாம் அறிந்தவர்கள்; எல்லாம் தெரிந்தவர்கள். உங்களுக்கு சொல்ல வேண்டும் என்று தேவையில்லை. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் என்று ஆட்சிக்கு வந்தாலும் இங்கு திட்டங்கள் நடைபெறுவதில்லை. ஈரோடு தொகுதியை பொறுத்தவரை அவர்கள் எடுத்துச் சொல்லட்டும் நாங்கள் இது போன்ற திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம் என்று. ஒரு திட்டத்தை அவர்களால் சொல்ல முடியாது. முத்துசாமி அதிமுகவில் இருந்தபோது பல திட்டங்களைக் கொடுத்தார். ஆனால், அவர் திமுகவிற்கு சென்றதற்கு பிறகு அவராலும் கூட இங்கே ஒரு திட்டத்தையும் நகர்த்த முடியவில்லை.

 

இந்த தேர்தலில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எங்களால் புரிந்துகொள்ள முடியாது. கண்ணதாசன் ஒன்றைச் சொல்வார் 'பாலுக்குள் தயிர் இருக்கிறது; தயிருக்குள் வெண்ணெய் இருக்கிறது; வெண்ணெய்க்குள் நெய் இருக்கிறது; ஒன்றுக்கு ஒன்று உப்பிடுகிறது. ஆனால், மனிதன் உள்ளத்தில் என்ன இருக்கிறது என்று நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை' என்று கண்ணதாசன் சொன்னார். இதனால் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் என்ன இருக்கிறது என்று நம்மால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், உங்கள் உள்ளங்களில் எங்களை வாழ வைக்கும் எண்ணம் இருக்கிறது. ஆகவே வாழ வையுங்கள். நன்றி'' என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு துரை வைகோ அஞ்சலி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Durai Vaiko Tribute to GaneshaMurthy 

ம.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று (28.03.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு இன்று மாலை நேரில் சென்று மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார். அனைத்துக் கட்சி முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் துரை வைகோ இரங்கல் உரை ஆற்றினார்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்த இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.