Skip to main content

கரோனாவிற்கு பின் சரிந்த எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு... சர்வே முடிவால் அதிருப்தியில் அதிமுகவினர்! 

Published on 03/06/2020 | Edited on 03/06/2020

 

admkகரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இருப்பினும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,98,706- லிருந்து 2,07,615 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,598- லிருந்து 5,815 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,00,303 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதித்த 1,01,497 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 


இந்த நிலையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு பின் பிரதமர் மோடிக்கு ஆதரவாக 65 சதவீதம் மக்கள் கருத்து தெரிவித்துள்ளதாக சி-வோட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் முதல்வர்களின் செயல்பாடுகளைப் பொருத்தவரை, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் சிறப்பாகச் செயல்படுவதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவருக்கு 82.96 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தப் பட்டியலில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். அதேபோல, மக்களின் அதிருப்தியை பெற்ற முதல்வர்களின் பட்டியலில் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தமிழக முதல்வர் பழனிசாமி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த சர்வே முடிவால் அதிமுகவினர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே போல் தமிழகத்தில்  32.15% பேர் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 
 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தொடங்கிய இடத்திலேயே 'பிக்பாக்கெட்'; சசிகலா கூட்டத்தில் அதிர்ச்சி

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
Pickpocket right where the tour starts; shocked the Sasikala crowd

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன், சசிகலா எனப் பல தரப்புகளும் பிரிந்து கிடக்கும் நிலையில் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பும், அதேபோல் சசிகலா தரப்பும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.

இந்நிலையில் அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியாக இரண்டாவது முறையாக மீண்டும் 'அம்மா வழியில் மக்கள் பயணம்' என்ற பெயரில் சுற்றுப் பயணத்தை சசிகலா தொடங்கியுள்ளார். தென்காசி அடுத்த காசிமேசபுரத்தில் இருந்து சசிகலா தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் சுற்றுப் பயணம் தொடங்கிய இடத்திலேயே பொதுமக்கள் மற்றும் செய்தியாளர்கள் 5 பேரிடம் மர்மநபர் ஒருவர் பிக்பாக்கெட் அடித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் வந்த சசிகலாவுக்கு அவருடைய ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் பொதுமக்கள் மத்தியில் சசிகலா உரையாற்றினார். இதனால் அங்கு பொதுமக்கள் கூடியதோடு செய்தி நிறுவனங்களின் ஒளிப்பதிவாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் கூடியிருந்தனர். இந்த நிலையில் செய்தியாளர்கள் மற்றும் மக்களிடமிருந்து மர்ம நபரால் பணம், நகை, பர்ஸ் ஆகியவை பிக்பாக்கெட் அடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது .

Next Story

“படித்து பட்டம் பெறுவதை விட பஞ்சர் கடை வைக்கலாம்” - பா.ஜ.க எம்.எல்.ஏவின் சர்ச்சை பேச்சு!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
BJP MLA's controversial speech in madhya pradesh

நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் வகையில் ‘பிரதமர் சிறப்புக் கல்லூரி’ என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்தில் நடைபெறும் இந்த திட்டத்தின் கீழ் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பா.ஜ.க எம்.எல் ஏ ஒருவர், மாணவர்களிடம் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மத்தியப் பிரதேசம் மாநிலம், குணா மாவட்டத்தில் இந்த புதிய கல்லூரியில் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அந்த தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ பன்னாலால் ஷக்யா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “நாம் இன்று பிரதமர் சிறப்பு கல்லூரியைத் திறக்கிறோம். இந்தக் கல்லூரிப் பட்டங்களால் எதுவும் நடக்கப் போவதில்லை என்பதை மனதில் வைத்துக்கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

அதற்குப் பதிலாக, குறைந்த பட்சம் மோட்டார் சைக்கிளுக்கு பஞ்சர் பார்க்கும் கடையை வைத்தால் உங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும்” என்று கூறினார். பா.ஜ.க எம்.எல்.ஏவின் இந்தச் சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.