Skip to main content

10 நாட்களுக்குப் பிறகு அதிமுக தலைமை அலுவலகம் திறப்பு... போலீசார் குவிப்பு!

Published on 21/07/2022 | Edited on 21/07/2022

 

 After 10 days, AIADMK head office opening... Police gathering!

 

கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பின் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சீலை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களுக்குப் பின் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தலைமை அலுவலகத்தின் சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது.

 

 After 10 days, AIADMK head office opening... Police gathering!

 

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி கடந்த 10 நாட்களுக்கு பிறகு இன்று அதிமுக தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. மயிலாப்பூர் வட்டாட்சியர் ஜெகஜீவன்ராம் சீலை அகற்றி சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த அலுவலக மேலாளர்கள் மகாலிங்கம், மனோகர் ஆகியோரிடம் ஒப்படைத்தார். இதனால் அதிமுக தலைமை அலுவலகத்திற்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வின் பொழுது முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உடன் இருந்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தொடங்கிய இடத்திலேயே 'பிக்பாக்கெட்'; சசிகலா கூட்டத்தில் அதிர்ச்சி

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
Pickpocket right where the tour starts; shocked the Sasikala crowd

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன், சசிகலா எனப் பல தரப்புகளும் பிரிந்து கிடக்கும் நிலையில் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பும், அதேபோல் சசிகலா தரப்பும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.

இந்நிலையில் அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியாக இரண்டாவது முறையாக மீண்டும் 'அம்மா வழியில் மக்கள் பயணம்' என்ற பெயரில் சுற்றுப் பயணத்தை சசிகலா தொடங்கியுள்ளார். தென்காசி அடுத்த காசிமேசபுரத்தில் இருந்து சசிகலா தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் சுற்றுப் பயணம் தொடங்கிய இடத்திலேயே பொதுமக்கள் மற்றும் செய்தியாளர்கள் 5 பேரிடம் மர்மநபர் ஒருவர் பிக்பாக்கெட் அடித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் வந்த சசிகலாவுக்கு அவருடைய ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் பொதுமக்கள் மத்தியில் சசிகலா உரையாற்றினார். இதனால் அங்கு பொதுமக்கள் கூடியதோடு செய்தி நிறுவனங்களின் ஒளிப்பதிவாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் கூடியிருந்தனர். இந்த நிலையில் செய்தியாளர்கள் மற்றும் மக்களிடமிருந்து மர்ம நபரால் பணம், நகை, பர்ஸ் ஆகியவை பிக்பாக்கெட் அடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது .

Next Story

தகராறு செய்த மனைவி; திருமணம் செய்து வைத்த புரோக்கரை தாக்கிய கணவர்

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
 husband  beaten broker who had married him because his wife had a dispute

விழுப்புரம் மாவட்டம் வடவாம்பழத்தைச் சேர்ந்த ஜானகிராமன் மகன் சக்திவேல். இவர் கூலி தொழில் பார்த்துவருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரி என்வருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. சக்திவேல் - ஜெகதீஸ்வரி இருவருக்கும் அரசமங்கலத்தை சேர்ந்த பெருமாள் என்ற கல்யாண புரேக்கர் திருமணம் செய்துவைத்திருக்கிறார். 

இந்த நிலையில் கணவன் சக்திவேலுக்கும், மனைவி ஜெகதீஸ்வரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோன்று சம்பவத்தன்று இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை தொடர்பாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றிக் கைகலப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மனைவி ஜெகதீஸ்வரி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் இருவருக்கும் வரன் பார்த்து திருமணம் செய்துவைத்த புரோக்கர் பெருமாளை தாக்கியுள்ளார். அரசமங்கலம் ரேஷன் கடையில் நின்றுக்கொண்டிருந்த அவரை சக்திவேல், “நீ தான எனக்குப் பெண் பார்த்து திருமணம் செய்து வச்ச, இப்போ பாரு என் மனைவி அடிக்கடி சண்டை போடுறா..” என்று ஆபாச வார்த்தையில் புரோக்கர் பெருமாளை திட்டி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து புரோக்கர் பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் சக்திவேல் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.