சொந்தக்கட்சியிலேயே அதிருப்தி இருக்கிற நிலையில், பலமான எதிர்க்கட்சியை எப்படி பட்ஜெட் கூட்டத் தொடரில் எடப்பாடி மேனேஜ் பண்ணப் போறார் என்று அரசியல் பார்வையாளர்கள் பேசிட்டு இருக்காங்க. இதில் எடப்பாடி ஒரு அதிரடி திட்டத்தை வைத்திருக்கிறார் என்று அதிமுகவில் சொல்லப்படுகிறது. இது பற்றி விசாரித்த போது, ஆளுங்கட்சி எம்.எல்.ஏக் களை குஷிப்படுத்திட்டா மிச்சமிருக்கிற காலத்துக்கு ஆட்சி வண்டி ஓடும்ங்கிறதுதான் எடப்பாடி கணக்கு போட்டுள்ளார்.

admk

Advertisment

Advertisment

எம்.பி. தேர்தல் சமயத்தில், கவனிப்புகள் தொடர்பா கொடுத்த உறுதிமொழிகள் சரியா நிறைவேறலைன்னு எம்.எல்.ஏ.க் கள்கிட்ட அதிருப்தி இருக்குது. அவங்களை குடும்பத்தோடு வரவழைச்சி, வெயிட்டான கிஃப்ட்டுகளை தாராளமா வழங்குறதுன்னு எடப்பாடி திட்டமிட்டிருக்காரு. மக்களுக்கான திட்டங்களுக்கு பட்ஜெட் டில் நிதி இல்லை. கட்சி எம்.எல். ஏ.க்களைக் குஷிப்படுத்த கிஃப்ட் தரப்படுது என பொதுமக்களும், எதிர் கட்சிகளும் அதிமுக அரசு மீது கோபத்தில் இருப்பதாக சொல்கின்றனர்.