Skip to main content

அதிமுக பொதுக்குழு விவகாரம்; உற்சாகத்தில் அதிமுக தொண்டர்கள் (படங்கள்)

Published on 23/02/2023 | Edited on 23/02/2023

 

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் இன்று (23.02.2023) உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக அமைந்ததால் அதனைக் கொண்டாடும் விதமாக எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த அதிமுக தொண்டர்கள் அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டும், பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், எடப்பாடி பழனிசாமியின் பேனருக்கு பால் ஊற்றியும் கொண்டாடினர். 

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள்; இ.பி.எஸ். கடும் எதிர்ப்பு!

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
EPS Strong opposition for New laws brought into force

இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றிற்கு பதிலாக மத்திய அரசு கொண்டுவந்த பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று (01.07.2024) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றில் இந்திய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. மாற்றங்களில் சில விமர்சனத்திற்கு உட்பட்டதாகவே இருக்கிறது. முக்கியமாக சட்டத்தின் பெயர்கள் சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியில் மாற்றப்பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல மற்றும் மிகுந்த கண்டனத்திற்குரியதும் கூட.

அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை இந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான இந்தி திணிப்பு. இந்தி திணிப்பானது பல மொழிகள் - பல கலாச்சாரங்கள் சங்கமித்திருக்கும் நமது தேசத்தின் அடிப்படை நீதிக்கும் அரசியலமைப்பு விழுமியங்களுக்கும் எதிரானது. இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய சட்டங்களை மாற்றியமைத்து இச்சட்டத்தில் உள்ள குளறுபடிகளை நெறிப்படுத்தி, சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியில் உள்ள சட்டத்தின் பெயர்களை மீண்டும் ஆங்கிலத்திலேயே மாற்றம் செய்யவேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ஆடு திருட்டில் முன்விரோதம்; அதிமுக நிர்வாகி கொலையில் திடுக்

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Antecedent in goat theft; AIADMK official shocked by murder

                           கொலை செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி  புஷ்பநாதன்   

கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் புஷ்பநாதன் என்பவர் நேற்று இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனால் இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உறவினர்கள், அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளை புஷ்பநாதனின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. முன் விரோதம் காரணமாக புஷ்பநாதனை மூன்று பேரும் சேர்ந்து கொலை செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

ஆலை காலனி பகுதியை சேர்ந்த நேதாஜி, அதே பகுதியைச் சேர்ந்த அஜய் மற்றும் சந்தோஷ் ஆகிய மூன்று பேர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மூவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவாளர்கள் என கூறப்படும் நிலையில், ஆடுகளை திருடி, அந்த பகுதியில் கசாப்பு கடை நடத்தி வந்த அதிமுக நிர்வாகி புஷ்பநாதனுக்கு விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. குறைந்த விலைக்கு ஆடுகளை தன்னுடைய கசாப்பு கடைக்காக வாங்கி வந்த புஷ்பநாதனிடம் திருடப்பட்டு வந்த ஆடுகளை தொடர்ந்து விற்று வந்தனர். இந்நிலையில் நேதாஜி, சந்தோஷ் மற்றும் அஜய் ஆகிய மூன்று பேரும் தேவனாம்பட்டினத்திற்கு காரில் சென்று திமுக பிரமுகர் ஒருவரின் வீட்டில் எட்டு ஆடுகளை திருடியுள்ளனர். இது குறித்த வழக்கில் மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Antecedent in goat theft; AIADMK official shocked by murder

                            கைது செய்யப்பட்ட சந்தோஷ், அஜய், நேதாஜி 

ஆடு திருட அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்திருந்தனர். இந்நிலையில் தங்களிடமிருந்து ஆடுகளை வாங்கிய புஷ்பநாதன் தங்கள் 3 பேரையும் ஜாமீன் எடுப்பார், வாகனத்தையும் போலீசிடம் இருந்து மீட்டர் தருவார் என மூன்று பேரும் நினைத்திருந்தனர். ஆனால் புஷ்பநாதன் அவ்வாறு செய்யாததால் புஷ்பநாதனுக்கும் மூன்று இளைஞர்களுக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வந்தவர்கள் இது குறித்து புஷ்பநாதனை நேரில் சந்தித்து கேட்டுள்ளனர். இதில் தகராறு ஏற்பட்ட நிலையில் மது போதையிலிருந்த மூன்று பேரும் புஷ்பநாதனை வெட்டி கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது