நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றது. இதில், 36 மாவட்டக்குழு உறுப்பினர் பதவியிடங்களில் போட்டியிட்ட பாமக 16 இடங்களை கைப்பற்றியுள்ளதாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுபோல் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 430 இடங்களில் களமிறங்கி 224 இடங்களில் பாமக வெற்றி பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சேலத்தில் 39 ஊராட்சி ஒன்றிய இடங்களில் பாமக வெற்றி பெற்றுள்ளது.ஊராட்சி ஒன்றியங்களைப் பொருத்தவரை, போட்டியிட்டவற்றில் 52 சதவீத இடங்களிலும் மாவட்ட ஊராட்சிகளைப் பொருத்தவரை களமிறங்கிய இடங்களில் 44 சதவீத இடங்களிலும் வெற்றி பெற்றிருப்பதாகவும் பாமக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சேலம் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவராக பாமகவைச் சேர்ந்த ரேவதியும், துணைத்தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ராஜேந்திரனும் வெற்றி பெற்றனர். சேலம் மாவட்ட ஊராட்சிக்குழுவில் மொத்தம் 29 உறுப்பினர் பதவிகள் உள்ளன. இவற்றுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. தேர்தல் முடிவுகள் ஜனவரி 2ம் தேதி வெளியானது. இதில், அதிமுக 18 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான பாமக 4, தேமுதிக 1 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. எஞ்சியுள்ள 6 இடங்களையும் திமுக கைப்பற்றி இருந்தது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
நடந்து முடிந்த தேர்தலில் பாமகவிற்கு அதிமுகவில் முக்கியத்துவம் கொடுத்து அதிக பதவிகளை கொடுத்துள்ளனர். தேமுதிகவிற்கு போதிய இடங்களையும், பதவிகளையும் கொடுக்காததால் கடும் அப்செட்டில் தேமுதிக தலைமை இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அடுத்து வரும் மாநகராட்சி, நகராட்சி தேர்தல்களில் தேமுதிகவுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம் என்று அதிமுக கூறியதாக சொல்லப்படுகிறது. அதோடு சேலம் தொகுதியில் துணை மேயர் பதவியும் தருகிறோம் என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே சேலம் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவராக பாமகவைச் சேர்ந்த ரேவதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.