Skip to main content

"திருந்துங்கள் இல்லையெனில் கதியற்றுப் போவோம்" - வேதனையில் அதிமுக நிர்வாகி

Published on 09/03/2023 | Edited on 09/03/2023

 

admk executive poster in kallakurichi trichy 

 

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவையடுத்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் புதிய பதவிகள் உருவாக்கப்பட்டு அதிமுகவில் இரட்டை தலைமை தொடர்ந்தது. இந்த நிலையில் தான் அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்சனை பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியது.

 

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும் பிரிந்தனர். அதன் பிறகு பொதுக்குழு கூட்டப்படு அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனைவரும் நீக்கப்பட்டனர். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை செல்லவே, சமீபத்தில் அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

 

இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தென்னரசுவை விட 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றார். இது அதிமுகவிற்கு படுதோல்வி என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு விமர்சித்ததோடு, இதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமிதான் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தது.  இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியிடம் கட்சி வந்ததில் இருந்து நடைபெற்ற 8 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது என்று கூறி, ‘எட்டு தோல்வி எடப்பாடி பழனிசாமி’ எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமியை இம்சை அரசன் போன்று சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான நான்குநேரி தொகுதி அமைப்பாளர் டென்சிங் சுவாமிதாஸ் பெயரில் நெல்லை மாவட்டத்தில் பரவலாக இந்த போஸ்டர் ஒட்டப்பட்டது. மேலும் அந்த போஸ்டரில் அதிமுக தோல்வியடைந்த தேர்தல்களின் விவரங்களும் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

admk executive poster in kallakurichi trichy 

 

இந்நிலையில், திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் பகுதியில் ஸ்ரீரங்கம் கிழக்கு பகுதி செயலாளர் டி.சிவபாலன் சார்பில்  ஒட்டப்பட்டுள்ள அதிமுக போஸ்டர் ஒன்றில், "அதிமுக தலைவர்களே! ஆட்சியை இழந்தோம், நாடாளுமன்றத்தைத் துறந்தோம், உள்ளாட்சியில் ஒதுக்கப்பட்டோம், ஈரோட்டில் இரட்டை இலையால் காப்புத்தொகை பெற்றோம். திருந்துங்கள், இல்லையெனில் கதியற்றுப் போவோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

admk executive poster in kallakurichi trichy 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்டச் செயலாளராக உள்ள வேங்கையன், இணை செயலாளர் பரமசிவம் ஆகியோர் பெயருடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், "வெளியேறு வெளியேறு. தலைமை பதவிக்கு தகுதி இல்லாத எடப்பாடியே, அதிமுகவை விட்டு வெளியேறு. உனக்கு துதி பாடும் மூளை இல்லாத முட்டாள்களுடன் வெளியேறு. நயவஞ்சக நம்பிக்கை துரோகி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.