ரெய்டுகள் மூலம் தன்னை மிரட்டும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு, மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் காரசாரமாக விஜய் பதிலடி கொடுப்பார் என்று அவர் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால் அவர் அந்த விழாவில் ரொம்பவும் சோகமாவும் இறுக்கமாவும் காணப்பட்டார். கடைசியாக பேசும்போது மக்களுக்காகத்தான் சட்டங்களே தவிர சட்டங்களுக்காக மக்கள் இல்லை என்று கூறினார். இது சம்பந்தமாக அவர் தரப்பில் கேட்ட போது, ரெய்டுகளின் மூலம் விஜய்யை நேரடியாக டெல்லித் தரப்பால் சிக்கவைக்க முடியவில்லை.

Advertisment

vijay

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

அதனால் அவருடைய "மாஸ்டர்' படத்தின் இணைத் தயாரிப்பாளரான லலித் ஜெயினைக் குறிவைத்து, ரெய்டுகளை நடத்தி செக் வைத்துள்ளதாக சொல்கின்றனர். விஜய்யை அமைதியாக இருக்கச் சொல்லுங்க. இல்லைன்னா உங்களுக்குத்தான் சிக்கல்னு ஜெயினை அவர்கள் மிரட்டிய மிரட்டல் தான், விஜய்யை அமைதி காக்க வைத்துள்ளது என்றவர்கள், அதனால் தான் அவர் சைலண்ட்டா இருந்துவிட்டு, விஜய்சேதுபதியை பேசவிட்டார் என்கின்றனர். கடவுளை காப்பாத்துறேன்னு சொல்றவங்களை நம்பாதீங்கன்னு பா.ஜ.க. தரப்பை விஜய்சேதுபதி கலாய்ச்சதில் விஜய் ரசிகர்களுக்கு ரொம்பவே சந்தோஷம் அடைந்துள்ளனர். விஜய்யின் அமைதியும் ரொம்ப நாளுக்கு நீடிக்காது என்றும் அழுத்திச் சொல்கிறார்கள்.