சென்னை அயனாவரம் பகுதியில் கரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டார். அப்போது பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு சாலையில் பூ விற்ற பெண்மணியிடம் 100 ரூபாய்க்கு பூக்களை வாங்கினார். அப்போது அவரிடம், ஏன் முக கவசம் போடவில்லை என கேட்டு, அவருக்கு முக கவசம் வழங்கியதுடன், ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார், இந்தியாவிலேயே, தமிழகத்தில்தான் கரோனா பரிசோதனைகள் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனைகள் அதிகம் மேற்கொள்ளப்படுவதால், தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது, இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. கறுப்பர் கூட்டம் மீது உடனடியாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்தது,முதலமைச்சரின் விரைவான நடவடிக்கை மகிழ்ச்சியளிப்பதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தே பாராட்டிருக்கிறார். நடிகர் ரஜினி மட்டுமின்றி பல தரப்பு மக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். பாஜவுடன் உறவு நல்லமுறையில் தொடர்ந்து கொண்டு இருக்கிறது, தமிழக பாஜகதலைவர் முருகனும் கூட தமிழகத்தில் அதிமுகவுடனான உறவு நல்லமுறையில் தொடர்ந்துகொண்டிருக்கிறது என்று தான் கூறியிருக்கிறார்.” இவ்வாறு கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-07/sw21.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-07/sw22.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-07/sw23.jpg)