Skip to main content

பொறுப்புள்ள எம்.எல்.ஏ.வாக செயல்பட வேண்டும்! -கருணாஸுக்கு ஈஸ்வரன் அட்வைஸ்!

Published on 03/08/2020 | Edited on 03/08/2020

 

actor karunas - ‎KMDK General Secretary E.R.Eswaran -

 

பொறுப்புள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட வேண்டுமென்று கருணாஸுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிவுரை கூறியுள்ளார். 

 

எய்தவன் இருக்க அம்பு மீது குறை சொல்லி என்ன பயன்?. திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் நடிகர் கருணாஸ் புரிந்து கொள்ள வேண்டும் என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எதிராக திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் நடிகர் கருணாஸ் ஜாதி ரீதியான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். நண்பர் கருணாஸ் அவர்களுக்குத் தெரியாதது அல்ல. அரசில் பணியாற்றுகின்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் ஐ.பி.எஸ். அதிகாரிகளும் ஆட்சியாளர்கள் என்ன சொல்கிறார்களோ அதைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதை மறுத்தால் அவர்கள் இடமாற்றம் செய்யப்படுவது உறுதி. இதுதான் நடைமுறையாக நடந்து கொண்டிருக்கிறது. 

 

நண்பர் கருணாஸ் அவர்களுடைய கூட்டணி கட்சியினுடைய ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சி அதிகார மையத்தில் இருப்பவர்களைக் குற்றம் சாட்டுவதை ஏதோ காரணங்களுக்காக தவிர்த்து ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் மீது குற்றம் சுமத்தி இருக்கிறார். ஜாதி ரீதியாகச் சுமத்தப்பட்டு இருக்கின்ற அவருடைய குற்றச்சாட்டு முன்னுதாரணமாக ஆகிவிடும். இதுபோல குற்றச்சாட்டுகளை வைக்கும்போது பொதுவாக வைக்காமல் குறிப்பிட்ட தவறுகளைச் சுட்டிக்காட்டி வைத்தால் நன்றாக இருக்கும். 

 

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் அவர்களும் உணர்ச்சிவயப்பட்டு பேசக்கூடியவர் தான். தமிழக முதலமைச்சர் மேல் குற்றச்சாட்டு வைத்து அவரை கொச்சைப்படுத்தி பேசியபோது காவல்துறையால் கைது செய்யப்பட்டார் என்பது இந்த நேரத்தில் குறிப்பிடப்பட வேண்டியது. அதனால் வருகின்ற காலத்தில் இதுபோன்ற பொத்தாம் பொதுவான ஜாதி குற்றச்சாட்டுகளைத் தவிர்த்து செய்த தவறை வெளிப்படையாகச் சொன்னால் நன்றாக இருக்கும். எல்லா சமூகங்களுக்கும் இன்றைக்கு அமைப்பு இருக்கிறது. எல்லாவற்றிலும் எழுச்சிமிகு இளைஞர்கள் அவரவர் சமூகத்திற்கு ஆதரவாக நிற்பவர்கள் உள்ளார்கள் என்பதைச் சமூக வலைத்தளங்களில் பார்த்தால் யார் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம். 

 

http://onelink.to/nknapp

 

இரு ஜாதிகளுக்கு இடையே உள்ள பிரச்சினையாக இது மாறி விடக்கூடாது. ஜாதி கலவரங்கள் இப்படிப்பட்ட சிறு பொறியில் தான் ஆரம்பிக்கும் என்பதை உணர்ந்து பொறுப்புள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அமமுக பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு! 

Published on 06/08/2023 | Edited on 06/08/2023

 

TTV selected as the general secretary of AMmk

 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் கட்சியின் துணைத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பழகன் தலைமையில் இன்று (06.08.2023) காலை சென்னை வானகரத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

 

இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர், தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக எடுத்த முடிவின்படி, கட்சியின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும், கட்சியின் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலும், கட்சியின் துணைத் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்பழகனும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பதவிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் கட்சியின் விதிமுறைகளின்படி நான்கு ஆண்டுகள் பதவி வகிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Next Story

‘அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்’ - தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியீடு 

Published on 11/07/2023 | Edited on 11/07/2023

 

ADMK General Secretary Eps Publication on Election Commission website

 

எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்து இந்தியத் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்சனை எழுந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி அதிமுக பொதுச்செயலாளராகத் தன்னை அங்கீகரிக்க வேண்டும் என்று இபிஎஸ் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராகக் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருந்தது.

 

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்ததைத் தொடர்ந்து அதற்கான விபரங்கள் அடங்கிய தகவல்கள் இந்தியத் தேர்தல் ஆணைய இணையதளத்தில் தற்போது பதிவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிமுகவின் அதிகாரப்பூர்வ அதிமுக பொதுச்செயலாளராக செயல்பட உள்ளார்.