cuddalore

Advertisment

கரோனா வேகமாக பரவி வருகிறது. பொது மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். அவர்களைப் பாதுகாக்க அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. இது சம்பந்தமாக கடலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சோதனை மையங்கள் எத்தனை.

இதுவரை எத்தனை பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. எத்தனை பேர் குணமாகி இருக்கிறார்கள். எத்தனை பேர் உயிரிழந்தனர். மக்களைப் பாதுகாக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன. அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது. இப்படி 32 விதமான கேள்விகளைக் கோரிக்கையாக எழுத்து மூலமாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகா முரி அவர்களை ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், V.கணேசன் இவர்களுடன் கடலூர் எம்.பி. ரமேஷ், எம்.எல்.ஏ.க்கள் புவனகிரி துரை சரவணன், நெய்வேலி சபா ராஜேந்திரன் ஆகியோர் குழுவாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் இந்தக் கேள்விகள் அடங்கிய மனுவை அளித்துள்ளனர்.

அப்போது மாவட்ட ஆட்சியர், தற்போது நடைபெற்று வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அவர்களிடம் எடுத்துக் கூறியுள்ளார். இவர் திறமையான சார் ஆட்சியராக ஈரோட்டிலும் அரியலூரிலும் செயல்பட்டவர் தற்போது கடலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள சந்திரசேகர சகா முறி.

Advertisment

எனவே கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆட்சியரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுக்கப்படுமா. பரவல் வேகம் குறையுமா. அதற்கு என்ன மாதிரியான புதிய நடவடிக்கைகளை ஆட்சியர் எடுக்கப் போகிறார் என்று பொதுமக்களும் அரசியல் கட்சிப் பிரமுகர்களும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.