Skip to main content

11-ஆம் வகுப்பு சேர்க்கைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவிப்பு

Published on 11/08/2020 | Edited on 11/08/2020
puducherry

 

புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு படித்த 16,485 மாணவ, மாணவிகள் தேர்வுகள் எழுதி முடிவுக்காக காத்திருந்தனர். இந்நிலையில்  கரோனா காரணமாக அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைந்ததாக புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. 

 

அதேசமயம் இன்று (11.08.2020) முதல் 11-ஆம் வகுப்பு சேர்க்கைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்  என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. 

 

அந்த அறிவிப்பில், புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பு முடிவுகள் இன்று (10.08.2020) வெளியானதை அடுத்து மாணவர்களுக்கு 11-ஆம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பம் நாளை (11.08.2020) முதல் வழங்கப்படும் எனவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 20-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒயின்ஷாப் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு; சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் விசாரணை

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

nn

 

புதுச்சேரியில் ஒயின்ஷாப் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

 

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அடுத்துள்ளது பங்கூர். அந்த பகுதியில் பிரபு என்பவர் ஷங்கர் ஒயின்ஸ் என்ற தனியார் ஒயின்ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பத்து மணிக்கு அந்த பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில், ஒருவர் கீழே இறங்கி கையில் இருந்த நாட்டு வெடிகுண்டை கடையின் மீது வீசினார். அது பயங்கர சட்டத்துடன் வெடித்துச் சிதறியது. இதுகுறித்து வில்லியனூர் போலீசார் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதோடு, சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். விசாரணையில், நாட்டு வெடிகுண்டு வீசியது அதியூர் பகுதியைச் சேர்ந்த செல்வா என்பது தெரிய வந்தது. இந்நிலையில், தலைமறைவாக உள்ள இளைஞர் செல்வாவை போலீசார் தேடி வருகின்றனர்.

 

 

Next Story

தமிழகம், புதுச்சேரியில் 7 நாட்களுக்கு மழை

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

Rain for 7 days in Puducherry, Tamil Nadu

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று (26.11.2023) முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதியில் நாளை (27.11.2023) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. நாளை உருவாகும் இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு வரும்.

 

இதனால் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நவம்பர் 29 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதே சமயம் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் நாளை மறுநாளுக்குள் (28.11.2023) கரைக்குத் திரும்ப அறிவுறுத்தப்படுகிறது ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.