/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Valentines_Day-std.jpg)
காதலர் தினமான இன்று அஹமதாபாத் நகரில் ஒரு இளைஞர்கள் குழு வித்தியாசமான முறையில் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளது. காதலர் தினமான இன்று குழுவாக கூடிய இளைஞர்கள் அங்குள்ள ஒரு முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்தில் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளனர். அங்குள்ள ஆதரவற்றோர் மற்றும் முதியவர்களுக்கு இனிப்புகள், உணவு வழங்கி பிறகு நடனமாடி கொண்டாடியுள்ளனர்.
இது குறித்து இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான ஒரு இளைஞர் கூறும்போது, 'நாம் அனைவருக்கு தாய் தந்தை தான் முதல் காதல், அதன் பிறகுதான் அனைத்தும், எனவே இந்த தினத்தில் அவர்களை கொண்டாடுவதில் எந்த தவறும் இல்லை. எனவே தான் இங்கு காதலர் தினத்தை கொண்டாடுகிறோம். இது அவர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. வெளித்தோற்றத்தில் நாம் மேற்கத்தியர்களாக மாறிவந்தாலும் நமது மனம் இந்தியர்களாவே இருப்பது தான் சிறந்தது' என கூறினார்.
மேலும் இது தங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள் என அந்த இல்லத்தில் வாழும் முதியவர்களும் கண்ணீர் மல்க தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)