கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த ஆசிக் என்பவர் ஷார்ஜாவிலிருந்து விமானம் மூலம் கொச்சி வந்துள்ளார். விமான நிலையத்தில் அவரின் நடவடிக்கையை பார்த்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவரை சோதித்துப் பார்த்தபோது அவர் தலையில் அணிந்திருந்த விக்கிற்கு அடியில் தங்கத்தை வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hjl.jpg)
இதற்காக ஆசிக் தலையின் ஒரு பகுதியில் உள்ள முடியை மட்டும் நீக்கிவிட்டு அந்த இடத்தில் கடத்தவேண்டிய தங்கத்தை கச்சிதமாகப் பொருத்தி அதன்மேல் விக்கை வைத்துள்ளார். இது பார்ப்பதற்கு எந்தவித சந்தேகத்தையும் ஏற்படுத்தாதவாறு இருந்த நிலையிலும், சுங்கத்துறை அதிகாரிகள் அவரை வசமாக மடக்கிப் பிடித்துள்ளனர். 1.5 கிலோ தங்கத்தை ஆசிக்கிடம் இருந்து காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)