hj

மும்பையில் கவனக்குறைவால் 28 வயது பெண்ணுக்கு 15 நிமிட இடைவெளியில் 3 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் தானே பகுதியைச் சேர்ந்த அந்த பெண், கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆனந்த்நகர் பகுதியில் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார். தடுப்பூசி பற்றிய நடைமுறைகள் அந்த பெண்ணுக்குத் தெரியாத காரணத்தாலும், தடுப்பூசி செலுத்துபவர்களின் அலட்சியத்தாலும் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

தடுப்பூசி செலுத்தப்பட்ட பெண் வீட்டிற்குச் சென்றதும் உடல்வலி ஏற்படவே நடைபெற்ற சம்பவத்தைத் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள். தற்போது அவர் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். தனது கணவர் மாநகராட்சியில் பணிபுரிவதால், தான் புகார் ஏதும் அளிக்கப்போவதில்லை என்று அப்பெண் தெரிவித்துள்ளார். அதேநேரம், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள தானே மாநகராட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.