young man passes away in pondicherry

புதுச்சேரி, வில்லியனூர் அருகே உள்ள அரும்பார்த்தபுரம் புதுநகர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் சீனிவாசன் என்கிற மூர்த்தி(31). இவர், ஆன்லைன் பிசினஸ் செய்து வருகிறார். தற்போது மூலக்குளத்தில் உள்ள தனது மாமியார் வீட்டில் மனைவியுடன் தங்கியுள்ளார். இவருக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவரது மனைவி ஹேமாவதி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. நேற்று காலை வீட்டை விட்டு கிளம்பிய இவர், இரவு நேரத்தில் நத்தம் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டார்.

Advertisment

மூர்த்தி, மது பாட்டிலால் கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் பல முறை குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மூர்த்தியின் உடலை கைப்பற்றிய வில்லியனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment