Published on 09/03/2019 | Edited on 09/03/2019
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. கடந்த இருநாட்களுக்கு முன்னதாக ஜம்மு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் பட்காம் மாவட்டம் காசிபோரா சந்தூரா என்ற இடத்தில் தனது வீட்டில் இருந்த முகமது யாசின் என்ற ராணுவ வீரரை நேற்று மாலை பயங்கரவாதிகள் கடத்திச் சென்று விட்டதாக தகவல் வெளியானது. இதனால் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் பெரிதாகவே, தற்போது இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, கடத்தப்பட்டதாக கூறப்படும் ராணுவ வீரர் முகம்மது யாசீன் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை எனவும், மேலும் இது தொடர்பான ஊகங்களை மக்கள் பரப்புவதை தவிர்க்க வேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.