Skip to main content

‘தனி’ கொடியின் கீழ் மல்யுத்த வீரர்கள் விளையாடுவார்கள் - உலக மல்யுத்த கூட்டமைப்பு எச்சரிக்கை

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

“Wrestlers will play under a separate flag” – World Wrestling Federation warning

 

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார்.

 

பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் பதவி விலக வேண்டும்; அதோடு அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனக் கூறி பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீரர்கள் கூட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டன. அதில் ஒரு வழக்கு 18 வயதுக்குட்பட்ட வீராங்கனை சுமத்திய குற்றச்சாட்டு என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருந்தது. மேலும் இந்த விவகாரத்தை விசாரிக்க 6 பேர் கொண்ட விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

 

ஓரிரு தினம் முன் புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. அப்போது நீதி கேட்டு மல்யுத்த வீரர்கள் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்பொழுது போலீசார் அவர்களைத் தடுத்து கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ள நிலையில் ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். மல்யுத்த வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த டெல்லி போலீஸ் அனுமதி தர மறுத்தது. டெல்லியின் முக்கியமான பகுதியான ஜந்தர் மந்தரில் 144 தடை உத்தரவு அமலில் இருந்தும் மல்யுத்த வீரர்கள் பேரணியாகச் சென்றது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் மல்யுத்த வீரர்கள் மீண்டும் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு அளித்தால் வேறு இடம் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே முன்பைவிட டெல்லி ஜந்தர் மந்தரில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

தொடர்ந்து நேற்று மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தாங்கள் வெற்றி பெற்று பெற்ற பதக்கங்களை மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசி விடுவோம் என வீராங்கனைகள் அறிவித்தனர். மேலும் டெல்லி இந்தியா கேட்டில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அறிவித்தனர். தொடர்ந்து நேற்று மாலை ஹரித்வாரில் குவிந்த அவர்களை விவசாய சங்கத்தினரும் மக்களும் சமாதானப்படுத்தினர். கடின உழைப்பால் கிடைத்த பதக்கங்களை கங்கையில் வீசினால், 2 ஒலிம்பிக் பதக்கங்களையும், காமன்வெல்த் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற பல பதக்கங்களையும் நாடு இழக்க வேண்டியிருக்கும். அதனால் பதக்கங்களை கங்கையில் வீச வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டனர். இதன் காரணமாக தங்களது முடிவை தற்போதைக்கு நிறுத்திய மல்யுத்த வீரர்கள் பிரிஜ் பூஷண் சிங் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு 5 நாள் கெடு விதித்துள்ளனர்.

 

இந்நிலையில் உலக மல்யுத்தக் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “நீதிக்காகப் போராடும் மல்யுத்த வீராங்கனைகளை அரசு நடத்தும் விதம், அவர்களை கைது செய்வது உள்ளிட்டவை கடும் கண்டனத்திற்குரியது; பா.ஜ.க. எம்.பியும், இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவருமான பிரிஜ் பூஷண் மீதான பாலியல் குற்றச்சாட்டில், இதுவரை சரியான விசாரணை நடத்தப்படாதது ஏமாற்றமளிக்கிறது; இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்; விளையாட்டு அமைச்சகம் விதித்துள்ள 45 நாட்கள் கெடுவுக்குள் WFI செயற்குழு தேர்தல் நடத்தப்பட வேண்டும்; தவறினால் இந்திய மல்யுத்த சம்மேளனத்தை சஸ்பெண்ட் செய்து, வீரர்கள் 'தனி' கொடியின் கீழ் போட்டிகளில் விளையாட உலக மல்யுத்த கூட்டமைப்பு வழிவகை செய்யும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

IND VS AUS : இறுதிப் போட்டியில் இந்தியா அபார வெற்றி

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

 IND VS AUS : India won the final

 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான கடைசி மற்றும் 5வது டி20 போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மேத்யூ வேட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

 

அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 21 ரன்களும் ருதுராஜ் 10 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்தடுத்து வந்த சூரியகுமார் 5 ரன்களிலும், ரிங்கு சிங் 6 ரன்களிலும், ஜித்தேஷ் ஷர்மா 24 ரன்களிலும் அவுட் ஆனார்கள். அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 37 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். இவருடன் கூட்டணி சேர்ந்த அக்சர்பட்டேல் 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது.

 

இதனைத் தொடர்ந்து 161 ரன்கள் என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ராவிஸ் ஹெட் 28 ரன்களும், ஜோஸ் பிலிப் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்தது. முகேஷ் குமார் 3 விக்கெட்கள் கைப்பற்றினார். இதன்மூலம் 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி வீழ்த்தியது. மேலும் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

கேப்டனாக ஷைன் ஆன சூர்யா! தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Surya shines as captain! India won the series!

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையான நான்காவது டி20 போட்டி ராய்ப்பூரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் சிறப்பான துவக்கம் தந்தனர். வழக்கம்போல அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த அனுபவ வீரரான ஸ்ரேயாஸ் 8 ரன்களுக்கு ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த கேப்டன் சூரியகுமாரும் 1 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

 

பின்னர் ருதுராஜ் உடன் இணைந்த ரிங்கு சிங் வழக்கம் போல தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் நன்றாக ஆடிக் கொண்டிருந்த ருதுராஜ் 32 ரன்களில் சங்கா பந்தில் ஆட்டம் இழந்தார். பின்பு ரிங்கு சிங்குடன் இணைந்த ஜித்தேஷ் சர்மா அதிரடியாக ஆடத் தொடங்கினார். ரிங்கு சிங் 29 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, ஜித்தேஷ் ஷர்மா 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த வீரர்களான அக்சர் பட்டேல் மற்றும் தீபக்சகர் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. ஆஸி சார்பில் ட்வார்சுயிஸ் 3 விக்கெட்டுகளும், பெஹ்ரெண்டார்ஃப் மற்றும் சங்கா தலா 2 விக்கெட்டுகளும், ஹார்டி 1 விக்கெட்டும் எடுத்தனர்.

 

பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு பிலிப்பே நிதானம் காட்ட, டிராவிஸ் ஹெட் அதிரடி துவக்கம் தந்தார். பந்துகளை பௌண்டரிகளாக பறக்க விட்டார். ஆனால் இவர்கள் இணையை இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவி புஷ்னோய் பிரித்தார். இவரது வந்தில் பிலிப்பே 8 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து அதிரடியாக ஆடி வந்த ஹெட்டை அக்சர் பட்டேல் 31 ரன்களில் வெளியேற்றினார். அடுத்து வந்த வீரர்களின் பென் 19 ரன்களிலும், ஹார்டி 8 ரன்களிலும், டிம் டேவிட் 19 ரன்களிலும், ஷார்ட் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் கேப்டன் வேட் மட்டும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் நின்று 36 ரன்கள் எடுத்தார் இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகளும், தீபக் சகர் 2 விக்கெட்டுகளும், பிஷ்னோய் மற்றும் ஆவேஷ் கான் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில், 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

 

சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அக்சர் பட்டேல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். கேப்டனாக பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே வெற்றி பெற்று சூரியகுமார், ஒரு சிறந்த கேப்டனாக தன்னை நிரூபித்துள்ளார். ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வரும் டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. 

- வெ.அருண்குமார்  

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்