Skip to main content

'1500 பேர்... 4 மணி நேரம்...12000 கிலோ சக்கரை... 27000 கிலோ எடை' கின்னஸில் இடம்பிடித்த மெகா கேக்!

Published on 17/01/2020 | Edited on 17/01/2020


கேரளாவில் கேக் தயாரிப்பதில் உலக சாதனை செய்யப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சூரில் கேரள பேக்கர்கள் சார்பில் ஆண்டுவிழா கொண்டாட்டங்கள் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக 6.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு கேக் தயாரிக்கப்பட்டது. சுமார் 1500 பேக்கர்கள் இணைந்து இந்த கேக்கை தயாரித்துள்ளனர். 



இதற்காக 12,000 கிலோ சக்கரையும், 15,000 கிலோ மாவையும் பயன்படுத்தி இந்த கேக் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கேக்கை தயாரிக்க 4 மணி நேரம் ஆகியுள்ளது. சுமார் 27,000 கிலோ எடை கொண்ட அந்த மெகா கேக் 10 செமீ அகலம் கொண்டது.  முன்னதாக 3.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட கேக் உலக சாதனை படைத்திருந்த நிலையில், கேரளாவில் தயாரிக்கப்பட்ட இந்த கேக் அந்த சாதனையை முறியடித்து கின்னஸில் இடம்பிடித்துள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பறக்கும் ஹெலிகாப்டரில் தொங்கியபடி புல்அப்ஸ் - கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்

Published on 07/08/2022 | Edited on 07/08/2022

 

Pullups while hanging from a flying helicopter

 

பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல்அப்ஸ் எடுத்து நெதர்லாந்தைச் சேர்ந்த யூ ட்யூபர் பிரவுனி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

 

யூ ட்யூபரான பிரவுனி உடல் தகுதியை மேம்படுத்தும் ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள் வழங்கும் நிபுணரும் ஆவார். இவர் பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல்அப்ஸ் எடுத்து உலக சாதனை படைத்துள்ளார். முன்னதாக ஆர்மீனியாவைச் சேர்ந்த ரோமன் சஹ்ரத்யான், இதேபோல 23 புல்அப்ஸ் எடுத்திருந்ததே உலக சாதனையாக இருந்த நிலையில், தற்போது அந்தச் சாதனையை பிரவுனி முறியடித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

 

 

Next Story

3000 க்ளிக்ஸ்... கின்னஸ் சாதனை படைத்த ரோஜா!

Published on 31/07/2022 | Edited on 31/07/2022

 

ROJA

 

ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், விளையாட்டுத்துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா, தனது தொகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறியும் பொழுது அந்த பகுதி மக்களுடன் சேர்ந்து வித்தியாசமான முறையில் எதையாவது செய்து வைரலாவது வழக்கம். அண்மையில் இளைஞர்களுடன் ரோஜா கபடி விளையாடும் காட்சிகளும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரசு நிதியுதவி வழங்கும் விழா ஆட்டோ ஒட்டியும்  அசத்தி இருந்தார் .

 

இந்நிலையில், தற்பொழுது கின்னஸ் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார் ரோஜா. அதாவது ஒரே ஆளை 3,000 கேமராக்கள் படம் பிடிப்பதற்காக இந்த கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் பெண் அமைச்சர் ஒருவரை 3,000 போட்டோகிராபர்கள் ஒரே நேரத்தில் போட்டோ கிளிக் செய்ததற்கான கின்னஸ் சாதனை இது என்பது குறிப்பிடத்தகுந்தது.