Skip to main content

பெண்கள் சபரிமலைக்கு செல்லக்கூடாது;தீபம் ஏந்தி போராட்டம்!!

Published on 27/12/2018 | Edited on 27/12/2018

அனைத்து வயது பெண்களும் சபாிமலை செல்ல எதிா்ப்பு தொிவித்து கேரளாவில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கையில் தீபம் ஏந்தி போராட்டம் நடத்தினாா்கள்.

           

 

சபாிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. அந்த தீா்ப்பை அமல்படுத்தும் விதமாக கேரளா அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் எதிா்ப்பு தொிவித்து நாம ஜெப யாத்திரை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். 

        

       

protest

 

 

இந்தநிலையில் போராட்டத்தின் இன்னொரு விதமாக  இந்து ஐக்கிய வேதி சாா்பில் நேற்று மாலை கேரளாவில் காசா்கோடு, மஞ்சேஸ்வரம் முதல் பாறசாலை வரை பெண்கள் சாலை ஓரத்தில் நின்று கைகளில் தீபம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனா்.

            

மேலும் இந்த போராட்டத்துக்கு வலு சோ்க்கும் விதமாக குமாி மாவட்டத்திலும் பெண்கள் கையில் தீபம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் களியக்காவிளையில் தொடங்கிய போராட்டத்தை பிரபல மலையாள நடிகரும் மேல்சபை எம்.பி.யுமான சுரேஷ் கோபி தொடங்கி வைத்தாா்.

 

 

சார்ந்த செய்திகள்