dumili

தமிழக பாஜக தலைவரை அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா மாற்றவுள்ளதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இது முற்றிலும் அடிப்படை உண்மைக்கு புறம்பானது என பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக தமிழிசை செளந்தரராஜன் இருந்து வருகிறார். இந்த நிலையில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவிடம் தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். இந்த அறிக்கையின்படி, தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் மாற்றப்படுவார் என ஒரு பிரிவு ஊடக தகவலில் கூறப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து தனது டிவிட்டர் பதிவில் விளக்கமளித்த முரளிதர ராவ்,

Advertisment

இந்த தகவல் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது. உண்மைக்கு மாறானது. இது விஷமம் நிறைந்தது. தொடர்ந்து தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக தமிழிசை செளந்தரராஜன் நீடித்திடுவார் என அவர் தெரிவித்துள்ளார்.