Skip to main content

முதலிரவு நடக்காததை வெளியே சொன்ன மனைவி; புதுப்பெண்ணையும் மாமியாரையும் வெட்டிக் கொலை செய்த கணவன்

Published on 16/03/2023 | Edited on 16/03/2023

 

nn

 

முதலிரவு நடக்காததை மனைவி வெளியே சொன்னதால் ஆத்திரப்பட்ட கணவர் புதுமணப் பெண்ணை வெட்டிக் கொன்றதோடு அவரது அம்மாவையும் வெட்டிக் கொலை செய்த சம்பவம் ஆந்திராவில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரவணன். பி.டெக் படித்துள்ள சரவணன் ஹைதராபாத்தில் உள்ள ஒரு வங்கியில் ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார். சரவணனுக்கும் தெலுங்கானாவில் வனபாத்தி பகுதியைச் சேர்ந்த இருபது வயது ருக்மணி என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் ஒன்றாம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தையடுத்து அன்று இரவே மணப்பெண் ருக்மணியின் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் சரவணன் மறுத்ததால் முதலிரவு நடைபெறவில்லை. தொடர்ந்து சில நாட்கள் சரவணன் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் அதிர்ச்சியடைந்த மணப்பெண் இதனை அவரது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

 

மணப்பெண்ணின் பெற்றோர்களும் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தகவல் பெண்ணின் உறவினர்களுக்கு எப்படியோ கசிய அவர்கள் சரவணனை கேலி கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் சரவணனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனையும் செய்துள்ளனர். இதனை அறிந்து சரவணனின் பெற்றோர் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

 

இந்நிலையில் தனது மனைவி ருக்மணியை மாடிக்கு அழைத்துச் சென்ற கணவன் சரவணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை வெட்டியுள்ளார். அதேபோல் ருக்மணியின் தந்தை வெங்கடேஷ்வரலு, அவரது தாயார் ரமாதேவி ஆகியோரை சரவணனின் தந்தை பிரசாத் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் வெங்கடேஷ்வரலு ரத்தக் காயத்துடன் தப்பி ஓடி விட்டார். இந்தச் சம்பவத்தில் மணப்பெண் ருக்மணியும் அவரது தாயார் ரமாதேவியும் சம்பவ இடத்திலேயே கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சரவணன் மற்றும் அவரது தந்தை பிரசாத் உள்ளிட்ட இந்தக் கொலை தொடர்பாக பலரை கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

94,737 மது பாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் அழிப்பு

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
94,737 bottles of liquor destroyed by road roller

அண்மையில் நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த நேரத்தில் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் ஒன்றாக சேர்த்து கிடங்கில் வைத்திருந்தனர்.

அந்தப் பாட்டில்கள் ரோடு ரோலர் வாகனம் கொண்டு உடைத்து அழிக்கப்பட்டது. சுமார் 94,737 மது பாட்டில்கள் தேர்தல் நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் என போலீசார் தெரிவித்துள்ளனர். மது பாட்டில்கள் சாலையில் அடுக்கி வைக்கப்பட்டு ரோடு ரோலர் வைத்து நொறுக்கப்பட்டு அழிக்கப்படும் அந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

சபாநாயகர் தேர்தல் தேதி அறிவிப்பு; தக்கவைக்க முயலும் பாஜக

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
nn

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 09.06.2024 அன்று நடைபெற்றது.

இந்நிலையில் ஜூன் 26 ஆம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக பாஜக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமார் ஆகியோர் தங்கள் தரப்பிற்கு சபாநாயகர் பதவி வேண்டும் என நிபந்தனை விதித்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதேநேரம் சபாநாயகர் பதவியை தாங்களே தக்க வைத்துக் கொள்ள பாஜக மும்முரம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

nn

கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை கேபினட் அந்தஸ்து பதவிகள் வழங்குவது, எத்தனை இணைய அமைச்சர் பதவிகள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டபோதே சபாநாயகர் தேர்வு தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அதன்படி பாஜகவை சேர்ந்த ஒருவரையே சபாநாயகராக நியமிக்க வேண்டும் என பாஜகவை சேர்ந்தவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக ஆந்திர மாநில பாஜக தலைவரான புரந்தேஸ்வரியை அந்த பதவிக்கு கொண்டு வர வேண்டும் என பாஜகவின் ஒரு சாரார் விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. புரந்தேஸ்வரி ஆந்திர முதல்வராக உள்ள சந்திரபாபு நாயுடுவின் மனைவியின் சகோதரி என்பது குறிப்பிடத்தகுந்தது.