Skip to main content

மீன் விற்று படிப்பை தொடர்ந்த கேரள சாதனை மாணவியை கேலிசெய்த வாலிபர் கைது!

Published on 28/07/2018 | Edited on 28/07/2018

கேரளாவில் மீன் விற்று படிப்பை தொடர்ந்து வந்த ஹனன் என்ற மாணவியை பற்றி இணையத்தளத்தில் அவதூறு விமர்சனங்களை பரப்பிய கேரள வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

 

கேரளாவில் தொழுப்புழாவில் வசித்துவரும் 21 வயதுடைய கல்லூரி மாணவி ஹனன் இவர் தனது ஏழ்மையான குடும்ப சூழலில் பகுதிநேரமாக மீன் வியாபாரம் செய்துகொண்டு ஒரு தனியார் கல்லூரியில் பட்டயப்படிப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் கேரளாவிலுள்ள ''மாத்ருபூமி'' என்ற இதழில் அவரது வாழ்க்கை தொடரும், அவர் அன்றாட வாழ்க்கை நடைமுறை சிக்கல்கள் பற்றிய வீடியோவும் வெளியானது.

 

HANAN

 

 

 

அவருடைய வாழ்கை தொடர் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. மேலும் அவருக்கு ஆதரவாக பலர் குரல்கொடுத்து வந்தனர். இந்நிலையில் சில நெட்டிசன்கள் இந்த தொடர் போலியானது என கிண்டல் செய்தும், தாறுமாறாக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஹனனின் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அவரது உறவினர்கள் என பலர் அவருக்கு ஆதரவாக குரல்கொடுத்து இதழில் வெளியான தொடர் உண்மையானதுதான் என கூறிவந்தனர். அதோபோல் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தனம், அவரது பேஸ்புக் பதிவில் ''கடினமான வாழ்க்கையை எதிர்த்து போராடும் மாணவி ஹனனை தூற்றுவதை நிறுத்துங்கள்  என அவரை விமர்சித்தவர்கள் வாயடைக்கும்படி கூறியிருந்தார்.
 

HANAN

 

 

 

இருந்தும் கடுமையான விமர்சனங்களால் மனமுடைந்து போன ஹனன் தன்னை கடுமையாக விமர்சித்தவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் ''நான் உங்களிடம் எதுவும் கேட்கவில்லை, நீங்கள் எனக்கு எந்த உதவியும் செய்யவேண்டாம். இயன்ற வேலையை செய்து என் படிப்பையும் என் குடும்பத்தையும் பார்த்துக்கொள்வதுதான் எனது நோக்கம் எனவே என்னை தனிமையில் விட்டுவிடுங்கள்'' என கூறியுள்ளார். ஒரு மாணவியை மனமுடைய செய்த இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஹனனை பற்றி தவறான கருத்துக்களை பரப்பியவர்களை பற்றி கொச்சின் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வயநாட்டை சேர்ந்த  நூருதீன் ஷேக் என்ற வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

மயிலாப்பூரில் குழந்தை திருமணம்; பெற்றோருக்கு சம்மன்

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
Child marriage in Mylapore; Summons to parents

சென்னை மயிலாப்பூரில் பெற்றோர்கள் சிறார்களுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மயிலாப்பூரில் வசித்து வந்த 9 வயது சிறுமிக்கும் 15 வயது சிறுவனுக்கும் பெற்றோர்கள் குழந்தை திருமணம் செய்து வைத்ததாக மாவட்ட சமூக நல அலுவலர் ஹரிதாவுக்கு புகார் கிடைத்தது. புகாரின் அடிப்படையில் அங்கு சென்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். நடத்தப்பட்ட விசாரணையில் குழந்தை திருமணம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் இரண்டு சிறார்களையும் மீட்ட காவல்துறையினர் அவர்களை காப்பகத்திற்கு அனுப்பி வைத்ததோடு, குழந்தை திருமணம் செய்து வைத்த பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இரண்டு சிறார்களின் பெற்றோர்களும் இது குறித்த விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Next Story

கைமாறிய பெரும் தொகை?-ஆம்ஸ்ட்ராங் வழக்கில் மேலும் இருவர் கைது

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
Huge amount changed hands?- Two more arrested in Armstrong case including woman

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்படார். இது தொடர்பாக  சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் 14.07.2024 அன்று அதிகாலை என்கவுன்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் சரணடைந்த மொத்தம் 11 பேர் 5 நாட்கள் காவல் துறை கஸ்டடியில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் என்கவுன்டர் செய்யப்பட்ட திருவேங்கடத்தை தவிர்த்து மற்ற 10 பேரும் 5 நாள் காவல் கஸ்டடி முடிந்து பூவிருந்தவல்லி தனி கிளைச் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்  ஆம்ஸ்ட்ராங்  கொலை வழக்கில் மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மலர்கொடி மற்றும் ஹரிஹரன் என்ற இருவரை போலீசார் இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வழக்கறிஞரான ஹரிஹரன் தரப்பில் இருந்து கொலையாளிகளுக்கு பெரும் தொகை மாறியது விசாரணையில் தெரியவந்துள்ளது எனவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட ஹரிஹரன், மலர்க்கொடியை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  

மலர்கொடி  ஜாம்பஜார் பகுதியைச் சேர்ந்த தாதாவான தோட்டம் சேகருடைய மனைவி  என்று தெரியவந்துள்ளது. எதற்காக, யாரால் இந்த கொலை செய்யப்பட்டது என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.