காற்று மாசு தொடர்பான வழக்கு இன்று (29/11/2021) உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போதுதலைமை நீதிபதி, புதிய வகை கரோனா பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில், மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அரசின் தலைமை வழக்கறிஞர், “புதிய வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருகிறது” என்று விளக்கம் அளித்தார்.
உலக நாடுகளில் ஓமிக்ரான் வைரஸ் பரவிவரும் நிலையில், இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து இந்தியா வருவோருக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.