Skip to main content

லுங்கியுடன் வாகனம் ஓட்டியவருக்கு ரூ.2000 அபராதம்... மக்கள் மறந்துபோன 1989 சட்டத்தை நினைவுபடுத்திய காவல்துறை...

Published on 09/09/2019 | Edited on 10/09/2019

லுங்கியுடன் லாரி ஒட்டிய ஓட்டுநர் ஒருவருக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

 

weird new traffic fine

 

 

புதிய திருத்தியமைக்கப்பட்ட போக்குவரத்து விதிகள் அமல்படுத்தப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன. குறைந்தபட்ச அபராத தொகை ரூ.100 ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் லாரி ஓட்டுநர் லுங்கியுடன் வாகனத்தை இயக்கினார் என கூறி உத்தரப்பிரதேச காவல்துறை அவருக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக லக்னோவின் போக்குவரத்து காவல் அதிகாரி பூர்நெண்டு சிங் கூறும்போது, ஆடை ஒழுங்கு சட்டம் என்பது 1989ஆம் ஆண்டில் இருந்தே நடைமுறையில் உள்ளது. இதற்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டிருந்ததாகவும், 2019ஆம் ஆண்டு சட்ட திருத்தத்திற்கு பிறகு ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த சட்டத்தின்படி வாகனங்களை ஓட்டும் அனைவரும் இந்த சட்டத்தை கட்டாயம் பின்பற்றவேண்டும், ஆனால் இதுவரை யாருமே இதனை சரியாக பின்பற்றுவதில்லை என கூறினார். மேலும் பேசிய அவர், இந்த சட்டத்தின்படி, கனரக வாகன ஓட்டுநர்கள் பேண்ட், சர்ட் அல்லது டி-சர்ட் மற்றும் ஷூ அணிந்திருக்க வேண்டும், ஆனால் இப்போதைய சூழலில் பள்ளி வாகனங்களை ஓட்டும் நபர்களுக்கு மட்டுமே இது குறிப்பாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது என குறிப்பிட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ரத யாத்திரை; ஈசிஆரில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
Ratha Yatra Heavy traffic in ECR

ரத யாத்திரையால் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் இஸ்கான் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 44வது ஆண்டு விழாவாகப் பூரி ஜெகநாதர் ரத யாத்திரை இன்று (07.07.2024) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மதியம் 03.30 மணி அளவில் பலவாக்கத்தில் ரத யாத்திரை தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன் காரணமாகக் கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது இதனால் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவலர்கள் வாகனங்களை விரைந்து அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அதிகப்படியான பக்தர்கள் ஒரே இடத்தில் கூடியதால் கிழக்கு கடற்கரைச் சாலை கடும் போக்குவரத்து நெரிசல் செயல்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். 

Next Story

நீட் வினாத்தாள் கசிவு; 300 கோடி டார்கெட்; புட்டு புட்டு வைத்த பிஜேந்தர் குப்தா

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
NEET Question Paper Leak; 300 crore target; Bijendir Gupta who made Pudu Pudu

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

நீட்டிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் 300 கோடி ரூபாயை இலக்காக வைத்து நீட் மோசடியில் ஒரு கும்பல் ஈடுபட்டது தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. நீட் வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனங்கள் உதவியுடன் வினாத்தாள்கள் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. 700 மாணவர்களுக்கு நீட் வினாத்தாள் விற்க திட்டமிட்டதாக மோசடி கும்பலைச் சேர்ந்த பிஜேந்தர்  குப்தா என்பவர் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாகவே நீட் வினாத்தாள் கசியும் எனப் பிஜேந்தர் குப்தா மார்ச் மாதமே வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ தற்போது வைரலானது. போக்குவரத்தின் போது நீட் வினாத்தாள் பெட்டிகள் எப்படி உடைக்கப்படுகின்றன எப்படி கைமாறுகிறது என்பது பற்றியும் வீடியோவும் வெளியாகியிருந்தது. நீட் வினாத்தாள் கசிவில் அரசு அதிகாரிகள் முதல் அச்சகம் வரை தொடர்பு இருக்கும் எனப் பிஜேந்தர் குப்தா தெரிவித்திருந்தார். உத்திரபிரதேசத்தில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ள பேடி ராம் என்பவரின் உதவியாளராக இருந்த  பிஜேந்தர் குப்தா அவருடைய உதவியுடன் இதனைச் செய்தது தெரியவந்துள்ளது. வினாத்தாள் அடங்கிய பெட்டிகளை சாதுரியமாக உடைத்து அவற்றைத் திருடி விற்று வந்தது தெரியவந்துள்ளது.