Skip to main content

தமிழகத்தை சேர்ந்த எம்.எல்.ஏவின் வெற்றி செல்லாது; கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Published on 21/03/2023 | Edited on 21/03/2023

 

The victory of the MLA from Tamil Nadu is invalid; Kerala High Court Judgment

 

தமிழகத்தை சேர்ந்த எம்.எல்.ஏவான அ.ராஜாவின் வெற்றி கேரள உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

 

கேரளாவில் தற்போது பினராயி விஜயன் தலைமையிலான சிபிஎம் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பினராயி விஜயன் தலைமையிலான சிபிஎம் கட்சி வெற்றி பெற்று அரசமைத்தது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள தேவிகுளம் சட்டமன்ற தொகுதியில் சிபிஎம் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற வழக்கறிஞர் ராஜாவின் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

இடுக்கி மாவட்டத்தில் உள்ள தனித்தொகுதியான தேவிகுளத்தில் அ.ராஜா காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். 7,848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜாவின் வெற்றி செல்லாது எனக் கூறி காங்கிரஸ் கட்சியின் குமார் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்த மனுவில், பட்டியல் இனத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதால் தேர்தலில் போட்டியிட்ட ராஜாவின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், தேர்தலில் போட்டியிட போலியான சாதி சான்றிதழையும் சமர்ப்பித்து அ.ராஜா போட்டியிட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அறிவித்துள்ளது. அதில், தேவிகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.ராஜாவின் வெற்றி செல்லாது என்றும், தனித்தொகுதியில் போட்டியிட அ.ராஜா தகுதியற்றவர் என்றும் கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

தமிழ்நாட்டை சேர்ந்த அ.ராஜா தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் கேரள சட்டப்பேரவையில் சிபிஎம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 98 ஆக குறைந்துள்ளது. மேலும் அ.ராஜா உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டை சேர்ந்த அ.ராஜா பதவி ஏற்கும் போது தமிழில் உறுதிமொழி கூறி பதவி ஏற்றதால் எம்.பி. சு.வெங்கடேசன் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.