Skip to main content

ஒரு கோடி ரூபாயை வீட்டில் பதுக்கிய விஏஓ; சுற்றிவளைத்த லஞ்ச ஒழிப்புத்துறை 

Published on 25/05/2023 | Edited on 25/05/2023

 

VAO hoarded one crore rupees at home; Encircled anti-bribery department

 

கிராம நிர்வாக அதிகாரி ஒருவரின் வீட்டிலிருந்து ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பாலக்கியம் என்ற பகுதியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த சுரேஷ்குமார் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்பொழுது அவரது வீட்டிலிருந்து ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கப் பணம் கண்டுபிடிக்கப்பட்டது. சுரேஷ்குமாரை கைது செய்த போலீசார் இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விஏஓ வீட்டிலிருந்து ஒரு கோடி ரூபாய் லஞ்ச பணம் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

இந்திரா காந்திக்குப் புகழாரம் சூட்டியதால் சலசலப்பு; சுரேஷ் கோபி விளக்கம்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Explained by Suresh Gopi for Uproar over praise of Indira Gandhi

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கேரளா மாநிலம், திருச்சூர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்ததன் விளைவால், கேரளாவில் முதல் முறையாக பா.ஜ.க கால் பதித்தது. 

கேரளாவின் ஒரே ஒரு எம்.பியான சுரேஷ் கோபிக்கு, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஒன்றிய இணையமைச்சராக பதவியேற்ற சுரேஷ் கோபி, திருச்சூரில் உள்ள மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் கேரள முதல்வருமான கருணாகரனின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஈ.கே.நாயனார் மற்றும் கே.கருணாகரன் ஆகியோர் எனது அரசியல் குருக்கள். இந்திரா காந்தியை இந்தியாவின் தாயாகப் பார்ப்பது போல், கருணாகரனின் மனைவியை நான் அம்மா என்று தான் அழைப்பேன். 

எனது தலைமுறையில் கருணாகரனை, நான் மிகவும் மதிக்கும் துணிச்சலான தலைவர். அதனால், அவர் சார்ந்த கட்சி மீது எனக்கு ஒரு விருப்பம் இருக்கும். ஒரு இந்தியனாக, நாட்டிற்காக நிற்கும் ஒரு மனிதனாக, எனக்கு மிகத் தெளிவான அரசியல் உள்ளது. அதை உடைக்கக் கூடாது. ஆனால் மக்கள் மீது நான் வைத்திருக்கும் மரியாதை என் இதயத்திலிருந்து வருகிறது. அதற்கு நீங்கள் அரசியல் சாயம் பூசக்கூடாது. இந்திரா காந்தி ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த கே.கருணாகரன், கேரளாவுக்கு சிறந்த நிர்வாக பலன்களைப் பெற்று தந்துள்ளார்” என்று கூறினார். பா.ஜ.கவைச் சேர்ந்த சுரேஷ் கோபி, காங்கிரஸ் தலைவரையும், இந்திரா காந்தியையும் புகழ்ந்தது, பா.ஜ.கவினரிடையே பெரும் சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. 

இதனைத் தொடர்ந்து, சுரேஷ் கோபி கூறிய தனது கருத்துக்கு நேற்று (16-06-24) விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “நான் என்ன சொன்னேன்? காங்கிரஸைப் பொறுத்த வரையில், யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கே.கருணாகரன் தான் கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் தந்தை . இந்தியாவில் அதன் தாய் இந்திரா காந்தி. இதை நான் என் இதயத்திலிருந்து சொன்னேன். சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவின் உண்மையான சிற்பியாக இந்திரா காந்தி இருந்தார். அரசியல் போட்டிகள் கட்சியில் இருக்கிறது என்பதால் நாட்டுக்காக உண்மையாக உழைத்த ஒருவரை என்னால் மறக்க முடியாது” என்று கூறினார். 

Next Story

வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிரடி சோதனை; லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
Tahsildar arrested for taking bribe

திருவண்ணாமலை மாவட்டம் காட்டுக்கா நல்லூர் கிராமம் ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். தன்னுடைய தாயார் கண்ணம்மாள் பெயரில் சொத்து மதிப்பு சான்று பெற்று அரசு ஒப்பந்த டெண்டர்களை எடுத்து செய்து வருகிறார்.

இவர் சொத்து மதிப்பு சான்று பெற ரூபாய் 20 லட்சத்திற்கு அரசிற்கு செலுத்த வேண்டிய 7900 ரூபாய் வங்கியின் மூலமாய் காசோலை எடுத்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் மற்றும் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியரின் பரிந்துரை பெற்று கடந்த 13.6.2024 ஆம் தேதி ஆரணி வட்டாட்சியர் மஞ்சுளா அணுகி தந்துள்ளார்.

அவர் ரூ.20 லட்சம் சொத்து மதிப்பீடு சான்று பெற இரண்டு சதவிதம் ரூ,20,000 லஞ்சமாக கேட்டு உள்ளார். பின்னர் அவரிடம் அவ்வளவு தொகை இல்லை என்று சொல்லவே குறைந்தது ரூபாய் பத்தாயிரம் கொடுத்தால் மட்டுமே என்னால் சான்று வழங்க முடியும் என்று திருப்பி அனுப்பி விட்டார். அவர் மிக மோசமாக பேசியதால் மனம் உடைந்த சீனிவாசன் வேறு வழி இல்லாமல் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.

Tahsildar arrested for taking bribe

திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி திருவேல் முருகன் தலைமையில் காவல் ஆய்வாளர் மைதிலி, உதவி ஆய்வாளர். கோபிநாத் மற்றும் தலைமை காவலர்கள் கொண்ட குழுவினர் ஜூன் 14ஆம் தேதி மாலை ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் அவர் சென்று அணுகிய போது கொண்டு வந்த லஞ்சப் பணத்தை இரவு காவலர் பாபு என்பவரிடம் கொடுக்க சொல்ல ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை விஜிலன்ஸ் டிஎஸ்பி திருவேல் முருகன் மற்றும் காவல் ஆய்வாளர் மைதிலி கைப்பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணையில் மஞ்சுளா லஞ்சம் வாங்கச்சொன்னது உண்மை எனத் தெரியவந்து தாசில்தாரும், இரவு காவலரும் கைது செய்யப்பட்டனர்.