Skip to main content

முதல் தடவை ஆயிரம்... பின்னர் ஒவ்வொரு முறையும் பத்தாயிரம்! - முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த உ.பி அரசு அதிரடி!

Published on 20/04/2021 | Edited on 20/04/2021

 

mask

 

இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறு மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.

 

முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாதவர்களுக்கு மாநில அரசுகள், கடுமையான அபராதங்களை விதித்து வருகின்றன. இந்தநிலையில் மக்களை முகக்கவசம் அணியவைக்க உத்தரபிரதேச அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. 

 

முகக்கவசம் அணியாதவர்களுக்கு 1,000 ரூபாயை அபராதமாக விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவெடுத்துள்ளது. அபராதம் செலுத்தியவர்கள், அதன்பிறகும் முகக்கவசம் அணியாவிட்டால், ஒவ்வொரு முறையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என உத்தரபிரதேச அரசு அதிரடியாக அறிவித்துள்து.

 

 

 

சார்ந்த செய்திகள்