நாடு முழுவதும் பெண் சிசு கொலைகளை தடுப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், அதற்கான புதிய சட்டங்கள், திட்டங்கள் ஆகியவை அமல்படுத்தப்பட்டு வந்தாலும், இன்னும் பெண் சிசு கொலை இந்தியாவில் தொடர்ந்தே வருகிறது.

Advertisment

uttarakhand government reports on birth ratio

அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கை ஒன்று அங்கு நடைபெறும் பெண் சிசு கொலைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. உத்தரகாண்ட் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அம்மாநிலத்தில் உள்ள 132 கிராமங்களில் கடந்த 3 மாதத்தில் ஒரு பெண் குழந்தைக் கூட பிறக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

உத்தரகாண்ட்டில் உள்ள 132 கிராமங்களில் கடந்த 3 மாதத்தில் 216 குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் இதில் ஒன்று கூட பெண் குழந்தை இல்லை என்பது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. பெண் சிசுக்கள் கருவிலேயே கலைக்கப்படுவதே இதற்கான காரணம் என கூறப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளுக்கென புதிய திட்டங்கள், சலுகைகள் என பல முயற்சிகளை அரசுகள் மேற்கொண்டு வந்தாலும் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்து வரும் இந்த பெண் சிசு கொலைகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment