Skip to main content

ஹத்ராஸ் பெண்ணின் உடல் இரவோடு இரவாக எரிக்கப்பட்டது ஏன்..? உ.பி அரசு விளக்கம்...

Published on 06/10/2020 | Edited on 06/10/2020

 

Uttar Pradesh govt's affidavit in hathras case

 

ஹத்ராஸ் பெண்ணின் உடல் இரவோடு இரவாக எரிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் உ.பி அரசு விளக்கமளித்துள்ளது. 

 

ஹத்ராஸில் 19 வயது இளம்பெண்ணை நான்கு பேர் சேர்ந்த கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண், இரண்டு வாரங்கள் உயிருக்குப் போராடி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

 

இந்த பிரமாணப் பத்திரத்தில், "இந்த வழக்கில் யாருடைய தலையீடும் இன்றி, நியாயமான விசாரணையை சிபிஐ மேற்கொள்ள நீதிமன்றம் வழிநடத்த வேண்டும். இந்த வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணிக்க வேண்டும். இந்த விவகாரத்தில்  மாநில அரசாங்கத்தை இழிவுபடுத்துவதற்காக ஒரு "தீய பிரச்சாரம்" கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. காலையில் பெரிய அளவிலான வன்முறைகளைத் தவிர்ப்பதற்காக இறந்த பெண்ணின் உடலை இரவில் தகனம் செய்ய பெற்றோரை மாவட்ட நிர்வாகம் சமாதானப்படுத்தியது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஹத்ராஸ் சம்பவம்: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சி.பி.ஐ!

Published on 18/12/2020 | Edited on 18/12/2020

 

cbi

 

ஹத்ராஸில் 19 வயது இளம்பெண்ணை நான்கு பேர் சேர்ந்த கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண், இரண்டு வாரங்கள் உயிருக்குப் போராடி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதனைத் தொடர்ந்து நடந்த அடுத்தடுத்த சம்பவங்களும் மிகப்பெரிய சர்ச்சைகளாக வெடித்தன. 

 

இதனையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. அந்த விசாரணையையும் உச்சநீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று மாநில அரசு கோரியிருந்தது. இதுதொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், "ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது பெண் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், சி.பி.ஐ நடத்தும் விசாரணையை அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்காணிக்கும். வழக்கை கண்காணித்தல், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்குப் பாதுகாப்பு வழங்குதல், சாட்சியங்களுக்குப் பாதுகாப்பு வழங்குதல் அனைத்தையும் உயர்நீதிமன்றமே முடிவு செய்யும்" என அறிவித்தது. 

 

இந்தநிலையில், சி.பி.ஐ இந்த வழக்கில் இன்று (18.12.2020) குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மீதும், சி.பி.ஐ கொலை மற்றும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக, வழக்குப் பதிவு செய்துள்ளது. பட்டியலினத்தவர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் அந்த நால்வர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

 

 

 

Next Story

ஹத்ராஸ் குடும்பத்திற்கு 80 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பாதுகாப்பு...

Published on 02/11/2020 | Edited on 02/11/2020

 

crpf provide security to hathras victim family

 

ஹத்ராஸில் கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 80 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பாதுகாப்பு அளிக்கத் தொடங்கியுள்ளனர். 

 

ஹத்ராஸில் 19 வயது இளம்பெண்ணை நான்கு பேர் சேர்ந்த கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண், இரண்டு வாரங்கள் உயிருக்குப் போராடி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதனைத் தொடர்ந்து நடந்த அடுத்தடுத்த சம்பவங்களும் மிகப்பெரிய சர்ச்சைகளாக வெடித்துள்ளன. 

 

இதனையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. அந்த விசாரணையையும் உச்சநீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று மாநில அரசு கோரியிருந்தது. இதுதொடர்பான வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் சி.பி.ஐ நடத்தும் விசாரணையை அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் எனவும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்குப் பாதுகாப்பு வழங்குதல், சாட்சியங்களுக்குப் பாதுகாப்பு வழங்குதல் அனைத்தையும் உயர்நீதிமன்றமே முடிவு செய்யும் எனவும் அறிவித்தது.

 

மேலும், பெண்ணின் குடும்பத்தினருக்கு ஒரு வாரத்துக்கு சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமையன்று ஹத்ராஸ் வந்த சி.ஆர்.பி.எஃப் கமாண்டர் மன்மோகன் சிங் தலைமையிலான 80 சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.