Skip to main content

21 முறை ‘ஓம் ஸ்ரீ ராம்’ என எழுதி பொறுப்பேற்ற மத்திய அமைச்சர்!

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
The Union Minister took charge by writing 'Om Shri Ram' 21 times!

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. இதனால் ஆட்சி அமைக்கத் தனிப்பெரும்பான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளார். 

இந்தத் தேர்தலில் முக்கிய திருப்பமாக அமைந்த 16 எம்.பி.க்கள் கொண்ட சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 4 எம்.பிக்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கவிருப்பதாகத் தகவல் வெளியானது. அதன்படி, தெலுங்கு தேசம் கட்சி எம்.பி ராம் மோகன் நாயுடுவுக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 

இந்த நிலையில், இன்று (13-06-24) எம்.பி ராம் மோகன் நாயுடு மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்பதற்கு முன்னதாக 21 முறை ‘ஓம் ஸ்ரீ ராம்’ என்று எழுதி பொறுப்பேற்றார் என்பது கவனிக்கத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவன் பதவியேற்பு!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
R Mahadevan swearing in Supreme Court Judge
நீதிபதி மகாதேவன்

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பணியிடங்களில் காலியாக இருந்த 2 இடங்களுக்கு நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்திருந்தது. அதில் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்தது. அதே போன்று ஜம்மு - காஷ்மீர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த நோங்மெய்காபம் கோட்டீஸ்வர் சிங்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவும் கொலிஜியம் பரிந்துரை செய்தது.

நீதிபதி கோட்டீஸ்வர் சிங்கின் இந்த நியமனத்தின் மூலம் மணிப்பூர் மாநிலத்தில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் முதல் நீதிபதி ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்ட நீதிபதி மகாதேவனுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும்  தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். 

R Mahadevan swearing in Supreme Court Judge
நீதிபதி கோடீஸ்வர் சிங்

இந்நிலையில் நீதிபதிகள் மகாதேவன், கோடீஸ்வர் சிங் ஆகியோர் இன்று (18.07.2024) உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர். இவர்கள் இருவருக்கும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

Next Story

ஆளுநருடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
Union Minister Amit Shah consultation with the Governor

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி  5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக ஆளுநர் ஆர். என். ரவி நேற்று (16.07.2024) பிரதமர் மோடி, நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரை சந்தித்து பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று (17.07.2024) ஆளுநர் ஆர். என். ரவி மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசியிருந்தார்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் ஆளுநர் ஆர். என். ரவி சந்தித்து பேசியுள்ளார். மத்திய அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் ஆர். என். ரவி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Union Minister Amit Shah consultation with the Governor

இது தொடர்பாக ஆளுநர் மாளிகையின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ஆளுநர் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழ்நாட்டில் நிலவும் பாதுகாப்பு, அது தொடர்புடைய சூழ்நிலைகள்,  மாநில மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து மிகவும் ஆக்கபூர்வ  சந்திப்பை மேற்கொண்டேன்.  நமது மக்களை பாதிக்கும் பிரச்சனைகள் மீது அற்புதமான ஆழ்ந்த பார்வையும் அவர்களின் நல்வாழ்வில் மிகுந்த அக்கறையும் அவருக்கு உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் கொலை சம்பவங்கள் தொடர்பாக எதிர்க்கட்சியினர் பலரும் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்விகளை எழுப்பி வரும் சூழலில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் ஆர். என். ரவி சந்தித்து பேசியுள்ள சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.