Skip to main content

மத்திய அமைச்சர்கள்- துறைகள் ஒதுக்கீடு!

Published on 08/07/2021 | Edited on 08/07/2021

 

union cabinet ministers sector allocated president order

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய அமைச்சரவைப் பதவியேற்றுக் கொண்டது. இதில் ஹர்தீப்சிங் புரி, கிஷன் ரெட்டி, அனுராக் தாக்கூர் உள்ளிட்ட 15 பேர் கேபினட் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகன் உள்ளிட்ட 28 பேர் மத்திய இணையமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். புதிய அமைச்சர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

 

அதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்களுக்கான துறைகளை ஒதுக்கீடு செய்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

 

அதன்படி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையை பிரதமர் நரேந்திர மோடி கூடுதலாகக் கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கூட்டுறவுத்துறையைக் கூடுதலாகக் கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

1.மன்சுக் மாண்டவியா- மத்திய சுகாதாரம், ரசாயனம் மற்றும் உரத்துறை,
2.தர்மேந்திர பிரதான்- மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை,
3.ஹர்தீப் சிங் புரி- மத்திய பெட்ரோலியம், ஊரக வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை, 
4.ஸ்மிருதி இரானி- மத்திய பெண்கள், குழந்தைகள் நலத்துறை, தூய்மை இந்தியா திட்டம்,
5.பியூஸ் கோயல்- மத்திய ஜவுளித்துறை, வர்த்தகம், நுகர்வோர் நலத்துறை, உணவு  மற்றும் பொது விநியோகத்துறை, 
6.அஷ்வினி வைஷ்ணவ்- மத்திய ரயில்வே துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்புத்துறை,
7.ஜோதிராதித்ய சிந்தியா- மத்திய விமான போக்குவரத்துத்துறை,
8.அனுராக் தாக்கூர்- மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, இளைஞர் நலன், 
9.கிரண் ரிஜிஜூ- மத்திய சட்டத்துறை,
10.கிஷன்ரெட்டி- வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி, கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை,
11.எல்.முருகன்- மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் பொறுப்பு, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் பொறுப்பு,
12.வீரேந்திர குமார்- மத்திய சமூக நீதி, மேம்பாட்டுத்துறை,
13.ராமச்சந்திர பிரசாத் சிங்- மத்திய எஃகுதுறை,
14.பூபேந்தர் யாதவ்- மத்திய சுற்றுச்சூழல், வனம், தொழிலாளர், வேலை வாய்ப்புத்துறை, 
15.ராஜ்குமார் சிங்- மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை,
16.நாராயண் ரானே- மத்திய சிறு, குறு  மற்றும் நடுத்தர தொழில்துறை,
17.சர்பானந்த சோனாவால்- மத்திய துறைமுகம், கப்பல், ஆயுஷ்துறை,
18.ஷோபா- மத்திய வேளாண்துறை இணையமைச்சர்,
19.மீனாட்சி லேகி- மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர், 
20.அனுப்ரியா சிங் படேல்- மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர், 
21.கிரிராஜ் சிங்- மத்திய ஊரக வளர்ச்சித்துறை, பஞ்சாயத்துராஜ்,
22.பசுபதிகுமார் பாரஸ்- மத்திய உணவுப்பதப்படுத்துதல் துறை.

 

அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்