Skip to main content

மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு!

Published on 21/10/2020 | Edited on 21/10/2020


 

union cabinet approves government employees diwali bonus says union minister

 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொளி மூலம் இன்று (21/10/2020) காலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

 

அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விஜயதசமிக்கு முன், ஒரே தவணையாக போனஸ் வழங்கப்படும். 30 லட்சம் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ரூபாய் 3,737 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போனஸ் மூலம் பண்டிகைக் காலத்தில் பணப்புழக்கம் அதிகரித்து பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும். ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பஞ்சாயத்துத் தேர்தலை நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது." இவ்வாறு மத்திய அமைச்சர் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

Diwali bonus announcement for co-operative society workers

 

கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

 

தமிழக கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை 2023-2024-இல் வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சென்ற ஆண்டைப் போலவே அவர்களுடைய சம்பளத்தில் 10 சதவீதம் போனஸ் (போனஸ் மற்றும் கருணைத் தொகை) வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

 

போனஸ் சட்டத்தின் கீழ் வராத, தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களின் பணியாளர்களுக்கு 3 அயிரம் ரூபாயும், தொடக்க சங்கங்களின் பணியாளர்களுக்கு 2 ஆயிரத்து நானூறு ரூபாயும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள தலைமை கூட்டுறவுச் சங்கங்கள், மத்திய கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் 44 ஆயிரத்து 270 பணியாளர்களுக்கு  28 கோடியே ஒரு இலட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படவுள்ளது என கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

Next Story

பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு

Published on 26/10/2023 | Edited on 26/10/2023

 

 'Bonus for Govt Public Sector Employees'-Tamil Government Notification

 

அரசின் அனைத்து பொதுத்துறை ஊழியர்களுக்கும் 20% வரை போனஸ் வழங்கத் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 20% வரை போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த நிறுவனங்களில் ஒதுக்கப்படும் உபரி தொகையைக் கணக்கில் கொண்டு 8.33 சதவீதம், மிகை ஊதியம் 11.67 சதவீதம் கருணைத் தொகை என போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் 8,500 ரூபாயும், அதிகபட்சம் 16,800 ரூபாயும் பெறுவார்கள்.

 

தமிழ்நாடு அரசுப் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2.84 லட்சம் தொழிலாளர்களுக்கு 402.97 கோடி ரூபாய் போனஸாக தரப்பட உள்ளது. கூட்டுறவு அமைப்புகள் மற்றும் அது தொடர்பான நிறுவனங்களில் பணிபுரிவோருக்கான போனஸ் பற்றிய அறிவிப்பு தனித்தனியாக வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.