Skip to main content

ஆந்திரா மர்ம நோய் பரவல்: சந்தேகம் கிளப்பும் சந்திர பாபு நாயுடு!

Published on 07/12/2020 | Edited on 08/12/2020

 

chandra babu naidu

 

ஆந்திரா மாநிலத்தின் மேற்கு கோதாவரி பகுதியில் அமைந்துள்ளது எலுரு மண்டலம். இம்மாவட்டத்திலுள்ள 300க்கும் மேற்பட்ட மக்கள் திடீரென மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாயில் நுரை தள்ளுவதோடு மயக்கமடைந்து விடுகிறார்கள். இவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 

 

இந்த மர்மநோய் எதனால் ஏற்பட்டது என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குமட்டல், வலிப்பு மற்றும் மயக்கம் ஆகிய அறிகுறிகள் இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர்களில் சிலர் திடீர், திடீரென ஒலி எழுப்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன் மோகன், எள்ளுரு மாவட்ட அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

 

இதற்கிடையே, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திர பாபு நாயுடு, இந்த மர்ம நோய்க்கு இதற்கு குடிநீர் மாசுப்பாடே காரணம் என குற்றம் சாட்டினார். மேலும், எள்ளுரு மாவட்டத்தில் நடந்த நீர் மாசுபாடு காரணமாக ஆந்திரா முழுவதும் சுகாதார அவசரநிலையை பிரகனப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், இந்த பிரச்சனை ஆந்திர சுகாதாரத்துறையின் சீரழிவை காட்டுகிறது என விமர்சித்திருந்தார்.

 

இந்தநிலையில் தற்போது, ஆந்திர அரசு எள்ளுரு பிரச்னையை கையாளும் விதத்தில் சந்தேகத்தை கிளப்பியுள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " ஆந்திர அரசு, எள்ளுரு சம்பவத்தை தவறாக கையாளும் விதம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த மர்மமான உடல்நலக்குறைவால் உயிரிழந்த ஸ்ரீதர் என்பவரின் உடல், அவரது குடும்பத்தாரிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டது. சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று இரவு திரும்பிவந்து, ஸ்ரீதரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்யவேண்டுமென திரும்ப கேட்கின்றனர். ஆந்திரா அரசு எதை மறைக்க முயல்கிறது" என கேள்வி எழுப்பி, சுகாதாரத்துறை அதிகாரிகள் உடலை திரும்ப கேட்கும் விடீயோவையும் பதிவிட்டுள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

30 மாதங்களுக்கு முன் போட்ட சபதத்தை நிறைவேற்றிய சந்திரபாபு நாயுடு!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Chandrababu Naidu has fulfilled the vow made 30 months ago!

சமீபத்தில் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அதே வகையில், மக்களவைத் தேர்தலோடு ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து தெலுங்கு தேசம் கூட்டணி அபார வெற்றி பெற்றிருந்தது. 175 தொகுதிகள் கொண்ட ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான ஜன சேனா கட்சி 21 இடங்களிலும், பா.ஜ.க 8 இடங்களிலும்  வெற்றி பெற்றது.  

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக கடந்த 12ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம், ஆந்திரப் பிரதேசத்தில் 4வது முறையாக சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்றுள்ளார். இதனையடுத்து, ஆந்திர அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. 

இந்த நிலையில், ஆந்திர மாநில சட்டப்பேரவையின் 16வது கூட்டத்தொடர் நேற்று (21-06-24) கூடியது. இந்த கூட்டத்தில் தற்காலிக சபாநாயகராக புச்சையா சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி உள்பட அனைத்து எம்.எல்.ஏக்களும் தற்காலிக சபாநாயகர் புச்சையா சவுத்ரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். 4வது முறையாக முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடு, 30 மாதங்களுக்கு முன்பு போட்ட சபதத்தை நிறைவேற்றியுள்ளார்.

Chandrababu Naidu has fulfilled the vow made 30 months ago!

கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி ஆந்திர மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியது. அப்போது ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள், சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றி அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சந்திரபாபு நாயுடு, “ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் இந்த சபையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு  மரியாதை இல்லை. இனிமேல் இந்த சட்டமன்றத்துக்குள் வர மாட்டேன். அப்படி வந்தால், நான் முதல்வராகப் பதவியேற்ற பிறகுதான் மீண்டும் சபைக்கு வருவேன்” என்று சபதமிட்டு அவையை விட்டு வெளியேறினார். அன்று முதல், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆந்திரா சட்டமன்றத்துக்குள் சந்திரபாபு நாயுடு காலடி எடுத்து வைக்கவில்லை. 

30 மாதங்களுக்கு சட்டமன்றத்துக்குள் வராத சந்திரபாபு நாயுடு, முதல்வராகப் பதவியேற்ற பின் சட்டப்பேரவைக்குள் நுழைந்துள்ளார். இதைத் தெலுங்கு தேசம் கட்சியினர் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர். மேலும், ஏற்கெனவே சந்திரபாபு சபதம் எடுத்த வீடியோவையும், தற்போது சட்டப்பேரவைக்குள் முதல்வராக நுழையும் வீடியோவையும், இணைத்து தெலுங்கு தேசம் கட்சியினர் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். 

Next Story

விவாதத்தை கிளப்பிய எலான் மஸ்க்; ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவு!

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
upport Jagan Mohan Reddy for Elon Musk who says refuse evm machine

அமெரிக்க முதன்மை தேர்தலின் போது நடைபெற்ற வாக்குப்பதிவின் போது முறைகேடு நடைபெற்றது எனச் சுயேச்சை அதிபர் வேட்பாளர் ராபர்ட் எஃப் கென்னடி குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவை குறிப்பிட்டு எலான் மஸ்க், “மின்னணு வாக்கு இயந்திரங்களை அகற்ற வேண்டும். மனிதர்கள் அல்லது செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படும் ஆபத்து சிறியதாக இருந்தாலும் அதன் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது”எனக் கருத்து தெரிவித்திருந்தார். 

மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்று எலான் மஸ்க் கூறியிருந்த கருத்துக்கு பா.ஜ.கவினர் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர். அதே சமயம், எலான் மஸ்க் கருத்து உலகம் முழுவதும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியாவில் உள்ள பல அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

ஆந்திரப் பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலோடு கூடிய சட்டமன்றத் தேர்தலில், ஆட்சியில் இருந்த ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் படுதோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. அதன் பின்னர், பெருவாரியான வாக்குகளைப் பெற்ற தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றி சந்திரபாபு நாயுடு அம்மாநிலத்தில் நான்காவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளார்.

இந்த நிலையில், தேர்தலில் தோல்வியடைந்த ஜெகன் மோகன் ரெட்டி, எலான் மஸ்க் கூறிய கருத்துக்கு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “தேர்தலில் வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும். ஜனநாயகத்தில் மேம்பட்ட நாடுகளில் வாக்குச்சீட்டு முறையே உள்ளன. அங்கு வாக்கு இயந்திரங்கள் இல்லை. நமது ஜனநாயகத்தின் உண்மையான உணர்வை நிலைநிறுத்த நாமும் அதை நோக்கி நகர வேண்டும்” எனக் கூறினார்.