Skip to main content

ஆறு மாதங்களில் பட்டம் வழங்காவிட்டால் நடவடிக்கை- யூஜிசி எச்சரிக்கை!

Published on 09/04/2022 | Edited on 09/04/2022

 

UGC warns of failure to graduate within six months

 

படிப்பை முடித்த ஆறு மாதங்களில் மாணவர்களுக்கு பட்டம் வழங்காத பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என யூஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 

அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்களுக்கு யூஜிசி  எனப்படும் பல்கலைக்கழக மானிய குழுவின் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், படிப்பை முடித்த பின்னரும் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பட்டம் வழங்காமல் பல கல்வி நிறுவனங்கள் இழுத்தடிப்பதாக மாணவர்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன. இதனால் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. படிப்பை முடித்த 180 நாட்களில் பட்டம் வழங்காத பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சட்டமன்ற நாயகர் கலைஞர்; மாணவர்களை பாராட்டி பரிசளிப்பு

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
Prizes awarded to students who won kalaignar centenary celebration competition

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டம், கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி மற்றும் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் "சட்டமன்ற நாயகர் கலைஞர்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் சட்டமன்ற நாயகர் - கலைஞர் விழாக் குழு இணைத் தலைவர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி ஆகியோர் ‘சட்டமன்ற நாயகர் கலைஞர்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களை பாராட்டி பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ், விழாக்குழு உறுப்பினர் மற்றும் சட்டமன்றப் பேரவை முன்னாள் உறுப்பினர் ஞானசேகரன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், சட்டமன்ற பேரவை கூடுதல் செயலாளர் சுப்பிரமணியம், கடலூர் மாநகர மேயர் சுந்தரி ராஜா கலந்து கொண்டனர். கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் ‘சட்டமன்ற நாயகர் கலைஞர்’ என்ற தலைப்பில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. கலைஞர் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு பல்வேறு சிறப்புகளை செய்துள்ளார்கள். மேலும் அவர்களது முயற்சியால் தமிழ்மொழி செம்மொழியாக உலகம் முழுவதும் சிறந்து விளங்குகிறது.

கலைஞர் நிறைவேற்றிய சட்டங்களும், திட்டங்களும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியது. இந்தியாவில் உள்ள பல மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இதற்கு முக்கிய காரணம் கலைஞர் அவர்கள் நிறைவேற்றிய வளர்ச்சி திட்டங்களே ஆகும். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் உயர்கல்வி கற்றவர்களின் சதவீதம் உயர்ந்துள்ளது. பெண்களுக்கு சொத்துரிமை உள்ளிட்ட முன்னோடி திட்டங்களை அறிவித்து சிறப்பு சேர்த்தவர் என தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் வருவாய்த்துறையினர் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Next Story

பெங்களூரு: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு!

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

Bengaluru Announcement of holiday for schools and colleges tomorrow
கோப்புப்படம்

 

த‌மிழகத்தின் குறுவை சாகுபடிக்காக காவிரியில் கர்நாடகா சார்பில் அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என டெல்லியில் நேற்று முன்தினம் (26.09.2023) நடந்த காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 87வது கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் பல்வேறு விவசாய சங்கத்தினர் மண்டியா, மைசூரு, பெங்களூரு ஆகிய இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

 

மேலும் இதற்கு வலுசேர்க்கும் வகையில் கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தமிழகத்திற்குக் காவிரியில் இருந்து நீரை திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக அரசைக் கண்டித்தும் நாளை (29.09.2023) அன்று கர்நாடகா மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார். அதே சமயம் இவரின் அறிவிப்புக்கு அம்மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 150க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

 

இந்நிலையில் கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பெங்களூருவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர‌க் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நாளை டெல்லியில்  நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.