உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில்பக்ஷி-கா-தலாப் விமானபடைத்தளம் அமைந்துள்ளது. இந்த விமானப்படைத்தளத்திலிருந்து கடந்த மாதம் 27ஆம் தேதி இரவு ராஜஸ்தானின்ஜோத்பூர் விமானப்படைத்தளத்திற்குட்ரக் ஒன்று இராணுவத்திற்குத் தேவையான பொருட்களைஏற்றிச் சென்றுள்ளது. அவ்வாறு ஏற்றி செல்லப்பட்ட பொருட்களில்மிராஜ் போர் விமானத்தின் ஐந்து சக்கரங்களும் அடக்கம்.

Advertisment

இந்தநிலையில், அந்த ட்ரக்கிலிருந்து மிராஜ் போர் விமானத்தின் டயர்ஒன்று திருடப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஷஹீத் பாத் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைப் பயன்படுத்தி ஸ்கார்ப்பியோ காரில் வந்தவர்கள் டயரைத் திருடிவிட்டதாகவும், 27ஆம் தேதி நள்ளிரவு 12.30 - 1 மணிக்கிடையே இந்தத் திருட்டு நடைபெற்றததாகவும்ட்ரக்கின் ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதனைத்தொடர்ந்து, இந்த டயர் திருட்டு தொடர்பாக வழக்குப் பதிவுசெய்துள்ள காவல்துறையினர், சந்தேகத்திற்கு இடமான நபர்களிடம் விசாரித்துவருகின்றனர். இராணுவத்திற்குப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனத்திலிருந்து போர் விமானத்தின்டயர்திருடப்பட்டுள்ளசம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.