/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/New Project (45).jpg)
கேரளாவில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையேஸிகா வைரஸும்கேரளாவில் பரவி வருகிறது. கொசுக்கள் மூலம் பரவும் இந்த வைரஸ், குஜராத், மஹாராஷ்ட்ராஆகிய மாநிலங்களில் உறுதி செய்யப்பட்ட பிறகு, இம்மாத தொடக்கத்தில் கேரளாவில் உறுதி செய்யப்பட்டது.
அதன்பிறகு கேரளாவில்ஸிகா வைரஸால்பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று மேலும் இருவருக்குஸிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கேரளாவில் ஸிகா வைரஸ்பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது மேலும் இருவருக்குஸிகா வைரஸ் பாதிப்புஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள கேரள சுகாதாரத்துறை அமைச்சர்வீணா ஜார்ஜ், 46 பேரில் தற்போது ஐந்து பேர் மட்டுமே சிகிச்சையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)