Tunnel collapse incident Rescue operations are intense

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisment

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்கியான என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி பணியில் இருந்த 36 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப் பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து நிகழ்ந்துள்ளது. மீட்புப் பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை என கூறப்படுகிறது.