A truck collided with a bus in a terrible accident in assam and Tragedy for tourists

சுற்றுலா பேருந்து மீது லாரி மோதியதில் சுற்றுலா பயணிகள் 14 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

அஸ்ஸாம் மாநிலம், பாலிஜானில் இருந்து அத்கேலியா பகுதியை நோக்கி 45 பயணிகளுடன் சுற்றுலா பேருந்து இன்று (03-01-24) அதிகாலை சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே நிலக்கரி ஏற்றி வந்த லாரி ஒன்று பேருந்தின்மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. லாரி மோதியதில் சுற்றுலா பேருந்தில் இருந்த 45 பயணிகளில்14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisment

இதனை கண்ட அங்கிருந்தவர்கள், பேருந்தில் இருந்த காயமடைந்தவர்களைமீட்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த வந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாகபடுகாயமடைந்த 27 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.