திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கு ஒன்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், "திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக அவர்களைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருத வேண்டும். கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்பில் அவர்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்" என்று தீர்ப்பளித்தது.
இந்த உத்தரவுக்குப் பிறகு மத்திய அரசின் சமூகநீதித்துறை அமைச்சகம், அவர்களின் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் அதிகாரிகளைக் கொண்ட குழுக்களை அமைத்தது. அந்தக் குழுவினர் திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க பரிந்துரை செய்துள்ளனர். இந்தப் பரிந்துரை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அனுமதி கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலைவாய்ப்பு, கல்வி முதலியவற்றில் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் இதன் மூலம் உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.