Skip to main content

தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் நாளை மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது !

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

இந்தியாவில் 17-வது மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக நடைப்பெற உள்ளது. இந்த மக்களவை தேர்தலுடன் சில மாநில சட்டமன்ற தேர்தலும் நடைப்பெறுகிறது. இதற்கான முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் , இரண்டாம் கட்ட தேர்தலில் அஸ்ஸாம் (5) , சத்தீஸ்கர் (3) , பீகார் (5) , ஜம்மு & காஷ்மீர் (2) , கர்நாடகா (14) , மகாராஷ்டிரா (10) , மணிப்பூர் (1) , ஒடிசா (5) , தமிழ்நாடு (39) , புதுச்சேரி (1) , திரிபுரா (1) , உத்தரப்பிரதேசம் (8) , மேற்கு வங்காளம் (3) ஆகிய 13 மாநிலங்களில் 97 மக்களவை தொகுதிகளில்  , ஒடிஷா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு பதிவு ஏப்ரல் 18 ஆம் தேதி அன்று நடைப்பெறவுள்ளதால் , இதற்கான பிரச்சாரம் நாளை (16/04/2019) மாலையுடன் ஓய்கிறது. 

 

election campaign



இதனால் தேசிய அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.  இதனால் தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியது என்றே கூறலாம். ஒரு புறம் இந்திய தேர்தல் ஆணையம் 100% வாக்கு பதிவு இலக்கை எட்டும் வகையில்  வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் பதிவாகும் வாக்குகள் மே 23 ஆம் தேதி எண்ணப்படுகிறது.


பி.சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்