Skip to main content

தக்காளி காய்ச்சல்; மேலும் 26 குழந்தைகள் பாதிப்பு 

Published on 24/08/2022 | Edited on 24/08/2022

 

tomato flu

 

தக்காளி காய்ச்சல்  சமீப காலங்களில் அதிக அளவில் பரவுவதால் மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. 

 

தக்காளி காய்ச்சல் நோய்  முதன் முதலாக கேரளா கொல்லம் மாவட்டத்தில் மே மாதம் 6ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஜூலை 26 வரை 82 குழந்தைகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அனைத்து குழந்தைகளும் 5 வயதிற்கு கீழானவர்கள். இந்த பரவும் தன்மை கொண்ட நோயால் மேலும் 26 குழந்தைகள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கேரளா மாநிலத்தில் அதிக அளவில் பரவியதால் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டது. 

 

ஏற்கனவே இந்திய அரசு கொரோனா வைரஸ் மற்றும் குரங்கு அம்மை போன்ற நோய்களுக்கு தகுந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில் புதிதாக தக்காளி காய்ச்சல் நோய் குழந்தைகளுக்கு பரவுவதால் மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கைகளை துரிதமாக செயல்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.  தக்காளி காய்ச்சல் பரவும் தன்மை கொண்டது என்பதால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாக தனிமை படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அடிக்கடி உணவு ஆகாரங்கள் கொடுக்கலாம் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

இந்த நோய் 1 முதல் 10 வயதுடைய குழந்தைகளை அதிக அளவில் தாக்கலாம். காய்ச்சல், அரிப்பு, உடலில் அங்கங்கு தடிப்புகள், வாந்தி, வயிற்றுப்போக்கு , சோர்வு, உடல் வலி  போன்றவை ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

விண்டோஸ் மென்பொருள் முடங்கியது!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
Windows software error

உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் விண்டோஸ் (Windows) மென்பொருள் முடங்கியுள்ளது. இதனால் தகவல் தொழில்நுட்பத்துறை, வங்கி, விமானம், ரயில், மீடியா உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சேவைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கிரவுட்ஸ்ட்ரைக் (CrowdStrike) என்ற அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்கியுள்ளன என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் விண்டோஸை புதிதாக அப்டேட் செய்தவர்களின் கணினியில் ப்ளு ஸ்கிரின் எரர் ( Blue Screen Error) ஏற்பட்டுள்ளதால் பயனாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

இதன் காரணமாக சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட உலகம் முழுவதும் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா, யுனைடட் உள்ளிட்ட விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு விமான சேவைகள் தாமதமாகும் என விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இது தொடர்பாக மத்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உலகளாவிய விண்டோஸ்  செயலிழப்பு தொடர்பாக மைக்ரோசாப்ட் மற்றும் அதன் துணை நிறுவனங்களுடன்  தொடர்பில் உள்ளது. இந்த செயலிழப்புக்கான காரணம் கண்டறியப்பட்டு, சிக்கலைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

IND vs ZIM : 4 - 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்திய இந்தியா! 

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
IND vs ZIM: India won the series 4 - 1

கேப்டன் சுப்மன் கில் தமையிலான இந்திய அணி ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதனையொட்டி இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் டி20 தொடர் நடைபெற்றது. அதன்படி நடைபெற்ற முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. அதன் பின்னர் நடந்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3 - 1 என்ற கணக்கில் ஏற்கெனவே கைப்பற்றி இருந்தது.

இந்நிலையில் ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (14.07.2024) நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ரியான் பராக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அந்த வகையில் இந்திய அணியின் சார்பாக தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். ஜிம்பாப்வே அணியின் சார்பில் முதல் ஓவரை கேப்டன் சிக்கந்தர் ராஷா வீசினார். 

IND vs ZIM: India won the series 4 - 1

இந்த பந்தை எதிர்கொண்ட ஜெய்ஸ்வால் சிக்சர் அடித்து அசத்தினார். இருப்பினும் அந்த பந்து நோ பாலாக அறிவிக்கப்பட்டு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. ப்ரீ ஹிட்டாக வீசப்பட்ட முதல் பந்தை மறுபடியும் எதிர்கொண்ட ஜெய்ஸ்வால் அந்த பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் முதல் பந்திலேயே 12 ரன்களை அடித்த முதல் வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் புதிய உலக சாதனை படைத்தார்.

இதனையடுத்து முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 58 ரன்கள் விளாசினார். இதன் மூலம் இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு 168 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. இருப்பினும் ஜிம்பாப்வே அணி, 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா 4 - 1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இந்த டி20 தொடரின் தொடர் நாயகன் விருதை வாஷிங்டன் சுந்தர் வென்றார்.