Skip to main content

போராட்டத்தால் திருப்தி தேசாய் விமான நிலையத்தில் முடக்கம்.....

Published on 16/11/2018 | Edited on 16/11/2018
tirupthi desai


கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. கடந்த முறை நடை திறந்தபோதே உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பல இந்து அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த போராட்டம் இறுதியில் வன்முறையாக வெடித்தது. இதனால் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் யாரும் உள்ளே நுழைய முடியாமல் திரும்பினர். பின்னர் இந்த பிரச்சனையை சமாளிக்க அந்த பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டது.
 

இதற்கிடையே, பெண்ணியவாதியான திருப்தி தேசாய் சபரிமலைக்குள் செல்வேன் இது என் உரிமை என்று சொல்லிவருகிறார். சபரிமலைக்கு ஒரு குழுவினருடன் தான் வர உள்ளதாகவும், அதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டுள்ளார். அந்த கடிதத்தில் இதற்காக தனக்கு மிரட்டல்களும் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
 

இந்நிலையில், திருப்தி தேசாய் சபரிமலைக்கு செல்வதற்காக கொச்சி விமான நிலையம் வந்தடைந்துள்ளார். ஆனால், அவரது வருகையை தெரிந்த போராட்டக்காரர்கள் அவரை வெளியே வர விடாமல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ”காவல்துறை வாகனம் மூலமாகவோ பிற அரசு வாகனங்கள் மூலமாகவோ திருப்தி தேசாய் விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க மாட்டோம்.விமான நிலையத்தை விட்டு திருப்தி தேசாய் வெளியேறினாலும் கூட அவர் செல்லும் இடங்களில் எல்லாம் போராட்டம் நடைபெறும்” என்று போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். இதனால் திருப்தி தேசாய் மற்றும் அவரது குழுவினர் பாதுகாப்பாக விமான நிலையத்திற்குள்ளேயே வைக்கப்பட்டுள்ளனர். 

 


 

சார்ந்த செய்திகள்