Skip to main content

ஐந்து மாநில தேர்தல்: மாறும் களம் - லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

Published on 25/03/2021 | Edited on 25/03/2021

 

mks-mamata-eps

 

தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் அடுத்த சில நாட்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தல் முடிவுகள் வரும் மே 2ஆம் தேதி வெளியாக இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து டைம்ஸ் நவ் ஊடகமும், சி-வோட்டர்ஸும் இணைந்து இம்மாநிலங்களுக்கான தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை ஏற்கனவே வெளியிட்டிருந்தன. தற்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மீண்டும் ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளன. இந்தப் புதிய கருத்துக்கணிப்பின்படி, ஒரு மாநிலத்தில் போட்டி அதிகரித்திருக்கிறது. மற்ற மாநிலங்களில், கடந்த கருத்துக்கணிப்பில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்ட கட்சிகள் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்திக்கொண்டிருக்கின்றன.

 

புதுச்சேரி

டைம்ஸ் நவ் - சி-வோட்டர்ஸின் கடந்த கருத்துக்கணிப்பில், புதுச்சேரியில் பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் - அதிமுக கட்சிகள் இணைந்து 18 இடங்களைக் கைப்பற்றும் எனவும், காங்கிரஸ் - திமுக கூட்டணி 12 இடங்களைப் பெற்று தோல்வியடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள், பாஜக தலைமையிலான கூட்டணி 21 இடங்களைக் கைப்பற்றி பெரும் வெற்றியை ஈட்டும் என்றும், காங்கிரஸ் - திமுக கூட்டணி வெறும் 9 இடங்களை மட்டுமே பெறும் எனவும் தெரிவிக்கிறது.

 

அஸ்ஸாம்

அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜக கூட்டணி 67 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 57 இடங்களையும் வெல்லும் என கடந்த கருத்துக்கணிப்பு கூறிய நிலையில், தற்போதைய கருத்துக்கணிப்பு முடிவின்படி, பாஜக கூட்டணி 69 இடங்களைக் கைப்பற்றவுள்ளது. காங்கிரஸ் ஒரு இடம் குறைந்து 56 இடங்களைப் பெறவுள்ளது. 

 

கேரளா

டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸின் தற்போதைய கருத்துக்கணிப்பில், கேரளாவில் போட்டி சற்று அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த கருத்துக்கணிப்பில் 82 இடங்களைப் பெற்று ஆட்சியமைக்கும் என கூறப்பட்ட இடது ஜனநாயக முன்னணி, தற்போது 77 இடங்களை மட்டுமே பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு 56 இடங்களை வெல்லும் என கூறப்பட்ட காங்கிரஸ், 62 இடங்களை வெல்லும் என தற்போதைய கருத்துக்கணிப்பு கூறுகிறது.

 

மேற்குவங்கம்

மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் முந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையை விட, அதிக தொகுதிகளை வெல்லும் என புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. முன்பு 156 இடங்களில் வெல்லும் என கூறப்பட்ட மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் தற்போது 160 இடங்களை வெல்லும் எனவும், முந்தைய கருத்துக்கணிப்பில் 107 இடங்களைக் கைப்பற்றும் என கூறப்பட்ட பாஜக தற்போது 112 இடங்களில் வெல்லும் என புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

 

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிவாய்ப்பு முன்பை விட தற்போது உயர்ந்துள்ளதாக டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸின் புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. கடந்த கருத்துக்கணிப்பில் 158 இடங்களில் வெல்லும் என கூறப்பட்ட திமுக கூட்டணி, தற்போதைய கருத்துக்கணிப்பின்படி 177 இடங்களைக் கைப்பற்றவுள்ளது. அதேநேரத்தில் 65 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்ட அதிமுக கூட்டணி, தற்போது 49 தொகுதிகளை மட்டுமே பெறும் என புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. அதேபோல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை தலா 3 இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக பா.ஜ.க.வினருக்கு பிரதமர் மோடி பாராட்டு! 

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Prime Minister Modi praises Tamil Nadu BJP

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் இந்த மக்களவை தேர்தலில் திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தென்காசி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மேலும் பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் இராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அ.ம.மு.க. பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பா.ம.க காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

Prime Minister Modi praises Tamil Nadu BJP

இந்நிலையில் பிரதமர் மோடி நமோ செயலி (NAMO APP) மூலம் ‘எனது பூத், வலிமையான பூத்’ என்ற தலைப்பில் தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகளுடன் உரையாடினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக பாஜகவின் அனைத்துத் தொண்டர்களும் மிக நீண்ட காலமாக நன்றாக தேர்தல் பணிகளைச் செய்து வருகின்றனர். ‘எனது பூத், வலிமையன பூத்’ என்றால் எனது வாக்குச் சாவடி வலிமையானது என்று பொருள். இந்த திட்டம் அனைத்து பா.ஜ.க. தொண்டர்களையும் இணைப்பதுடன் ஒருவருக்கொருவரும் கற்றுக்கொள்ள உதவும்.

தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் வணக்கத்தோடு பேசத் தொடங்குகிறேன், ஆனால் இன்றைய வணக்கம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் ஒரு தொண்டர் மற்றொரு தொண்டரை வாழ்த்துகிறார். வணக்கம் என்றவுடன், தொண்டர்களுக்குள் ஒரு உணர்வு வரும். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், பள்ளி நண்பர்களை சந்திக்கும் போதெல்லாம், 25, 30 வருடங்கள் கடந்தாலும், சிறியவர், பெரியவர் என்று யாரும்  பாராமல் ஒருவரை ஒருவர்  மகிழ்ச்சியுடன் சந்திக்கிறார்கள். அதேபோல், இது தேர்தல் பணி தொடர்பான ஒரு திட்டம் என்பதால் நானும் மகிழ்ச்சியில் நிரம்பி வழிகிறேன். உங்கள் எல்லோரையும் போல என் வாழ்வின் பெரும்பகுதியை ஒரு தொண்டனாகவே உழைத்திருக்கிறேன், அதனால்தான் இன்று நான் மிகவும் நன்றாக உணர்கிறேன்.

Prime Minister Modi praises Tamil Nadu BJP

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருவதால் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொது நிகழ்ச்சிகளுக்காக கடந்த முறை தமிழகம் வந்தபோது தமிழக மக்களின் ஆசிர்வாதம் கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. தொண்டர்களின் கடின உழைப்பைப் பார்க்க முடிந்தது, அப்படிப்பட்ட தொண்டர்களைப் பெற்றதை பெருமையாக உணர்ந்தேன். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை முன்மாதிரியாக கொண்டு பா.ஜ.க. செயல்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதும், அதில் பெண்கள் முக்கியப் பங்காற்றுவதும் எங்களது உறுதி. பா.ஜ.க.வின் பெண் தொண்டர்கள் கடுமையாக உழைத்து வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

போதைப்பொருட்கள் நம் குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையை அழிக்கும். கடந்த நாட்களில் கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப்பொருள் பதுக்கல்களும், அதற்கு முக்கிய காரணமானவர்கள் தமிழ்நாட்டுடன் தொடர்புடையவர்கள். இது மிகவும் கவலைக்குரிய விஷயம். எனவே நீங்கள் அனைவரும் நம் குடும்பங்களையும், குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்” எனப் பேசினார். 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.