
சமீப காலங்களில் பல்வேறு திரைப்பட நடிகர்களுக்கு அவர்களது ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து, புதிய திரைப்படம் வெளியீடு போன்றவற்றுக்கு மாறுபட்ட வகையில் வரவேற்பு கொடுத்தும், வாழ்த்து தெரிவித்தும் வித்தியாசமாக செய்து வருகின்றனர்.
அந்த வகையில் அஜித் ரசிகர் ஒருவர் அஜித் நடித்து வரும் 'துணிவு' படத்தின் அப்டேட் கேட்டு தனது கையில் பிளேடால் எழுதி அதனை செல்போனில் படம்பிடித்து 'பிரஞ்ச் சிட்டி அஜித் ஃபேன்ஸ்' என்ற வாட்ஸ்அப் குழுவில் பதிவேற்றம் செய்துள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. குரூப் அட்மின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்த பதிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.