Skip to main content

"அது மோடியின் சொத்துக்கள் அல்ல" - மத்திய அரசை கடுமையாக தாக்கிய மம்தா!

Published on 25/08/2021 | Edited on 25/08/2021

 

MAMATA BANERJEE

 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 23 ஆம் தேதி, தேசிய பணமாக்கல் (national monetization pipeline) திட்டத்தை முறைப்படி ஆரம்பித்துவைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் குறைவாகப் பயன்படுத்தப்படும் அரசு சொத்துகள், குத்தகைக்கு விடப்படவுள்ளன. இதில் தேசிய நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் போன்றவற்றைக் குத்தகைக்கு விடுவதும் அடங்கும்.

 

இவ்வாறு அரசு சொத்துக்களைக் குத்தகைக்கு விடுவதன் மூலம் திரட்டப்படும் 6 லட்சம் கோடியை, உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதேநிறத்தில் இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிப்பு தெரிவித்துள்ளன.

 

நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, "நாட்டின் அனைத்து சொத்துக்களையும் பாஜக  விற்றுவிட்டது. அரசுக்கு சாதகமான தொழிலதிபர்களுக்கு நாட்டின் சொத்துக்களை பரிசாக அளிக்கிறார் பிரதமர்" என கடுமையாக விமர்சித்திருந்தார்.

 

இந்தநிலையில் மம்தா பானர்ஜியும் இந்த திட்டத்தை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக மம்தா, "அந்த சொத்துக்கள் மோடியுடையதோ பாஜகவினுடையதோ அல்ல. அந்த சொத்துக்கள் நாட்டினுடையது. நாட்டின் சொத்துக்களை பிரதமரால் விற்கமுடியாது. இது துரதிருஷ்டவசமான முடிவு. இந்த முடிவினால் அதிர்ச்சியடைந்தேன்" என கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது!

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
Russia's highest award for PM Modi

ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், “உலகத்தில் எரிபொருள் தேவை பெரும் சவாலாக இருந்தது. இது போன்ற நேரத்தில் உங்கள் ஒத்துழைப்பால் பெட்ரோல் மற்றும் டீசல் தொடர்பான சிரமங்களில் இருந்து பொதுமக்களைக் காப்பாற்ற முடிந்தது. இது மட்டுமின்றி இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஏற்பட்ட எரிபொருள் தொடர்பான ஒப்பந்தம் ஒரு வகையில் உலக நாடுகளுக்குச் சந்தையில் உறுதித்தன்மையை மறைமுகமாக அளித்ததை உலகமே ஏற்க வேண்டும்.

இது ஒரு சந்திப்பாக இருக்கலாம். மொத்த உலகத்தின் கவனமும் என்னுடைய இந்த பயணத்தின் மீது உள்ளது. இந்த வருகையின் மூலம் உலக நாடுகள் வெவ்வேறு அர்த்தங்களைக் கருதுகின்றனர். நேற்று நீங்கள் என்னை உங்கள் இல்லத்திற்கு அழைத்தீர்கள். ஒரு உண்மையான நண்பரைப் போல நாம் ஒன்றாக 4 - 5 மணி நேரம் செலவிட்டோம். பல தலைப்புகளில் விவாதித்தோம். உக்ரைன் பிரச்சினையை நாங்கள் வெளிப்படையாக விவாதித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் ஒருவருக்கொருவர் கருத்துக்களைக் கேட்டு மரியாதையுடன் புரிந்துகொள்ள முயற்சித்தோம். 

Russia's highest award for PM Modi

எங்கள் எதிர்கால சந்ததியினரின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு அமைதி மிகவும் அவசியம் என்று ஒரு நண்பராக நான் எப்போதும் கூறி வருகிறேன். ஆனால் வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுக்கு மத்தியில் போர்க்களத்தில் தீர்வுகள் சாத்தியமில்லை என்பதையும் நான் அறிவேன். இதனால் தீர்வுகள் மற்றும் சமாதான பேச்சுக்கள் வெற்றியடையாது. பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே நாம் அமைதிக்கான பாதையைப் பின்பற்ற வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர் (The Order of St. Andrew the Apostle) என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். ரஷ்யா - இந்தியா இடையேயான இரு தரப்பு உறவுகளில் பிரதமர் மோடி ஆற்றிய பணிகளுக்காக இந்த விருதை வழங்கினார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வழங்கினார். 

Russia's highest award for PM Modi

இது குறித்து பிரதமர் அலுவலகம் தெரிவிக்கையில், “கிரெம்ளினில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூ ஹாலில் நடந்த சிறப்பு விழாவில் ரஷ்யக் கூட்டமைப்பின் தலைவரான விளாடிமிர் புடின் இந்தியா - ரஷ்யா இடையேயான உறவை மேம்படுத்துவதில் பங்களித்ததற்காகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ரஷ்யாவின் உயரிய தேசிய விருதை வழங்கினார். இந்த விருது 2019 இல் அறிவிக்கப்பட்டது. பிரதமர் மோடி இந்த விருதை ஏற்கும் போது அதனை இந்திய மக்களுக்கும், இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவுக்காக அர்ப்பணித்தார். இந்த விருது 300 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியத் தலைவர் பிரதமர் நரேந்திர மோடி ஆவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புடின் உடன் பேச்சுவார்த்தை!

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
PM Modi talks with Russian President Putin

ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி மாஸ்கோவில் ரஷய அதிபர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், “மாண்புமிகு எனது நண்பரே இந்த மகத்தான வரவேற்புக்கும் மரியாதைக்கும் நான் உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் நடைபெற்ற தேர்தலில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ளோம். அதன் பிறகு நீங்கள் தெரிவித்த வாழ்த்துக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மார்ச் மாதம் நீங்களும் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தீர்கள். மீண்டும் ஒருமுறை உங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 40-50 ஆண்டுகளில் இந்தியா தீவிரவாதத்தை சந்தித்து வருகிறது. தீவிரவாதம் எவ்வளவு கொடூரமானது, கேவலமானது என்பதை 40 ஆண்டுகளாக நாம் சந்தித்து வருகிறோம். எனவே, மாஸ்கோவில் பயங்கரவாத சம்பவங்கள் நடந்தபோது ​​தாகெஸ்தானில் பயங்கரவாத சம்பவங்கள் நடந்தபோது, ​​அதன் வலி எவ்வளவு ஆழமாக இருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.கடந்த 2.5 தசாப்தங்களாக ரஷ்யாவுடனும் உங்களுடனும் எனக்கு நட்பு உறவுகள் உள்ளன. சுமார் 10 வருடங்களில் 17 முறை சந்தித்துள்ளோம். கடந்த 25 ஆண்டுகளில் நாங்கள் சுமார் 22 இருதரப்பு சந்திப்புகளை நடத்தியுள்ளோம். இது எங்கள் உறவுகளின் ஆழத்தை பிரதிபலிக்கிறது. 

PM Modi talks with Russian President Putin

போராகட்டும், மோதல்களாகட்டும், பயங்கரவாதத் தாக்குதல்களாகட்டும் மனித நேயத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் உயிரிழப்புகள் ஏற்படும் போது வேதனைப்படுகிறார்கள். ஆனால் அப்பாவி குழந்தைகள் கொல்லப்படும்போது, ​​அப்பாவி குழந்தைகள் இறப்பதைப் பார்க்கும்போது, ​​நெஞ்சம் பதறுகிறது. அந்த வலி அபாரமானது. இது தொடர்பாக உங்களுடன் விரிவான விவாதமும் நடத்தினேன். கடந்த 5 ஆண்டுகள் முழு உலகிற்கும், ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் மிகவும் சவாலானவை. நாங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருந்தது. முதலில், கோவிட் மற்றும் பின்னர் மோதல்களின் சகாப்தம் மற்றும் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட பதற்றம் மனித குலத்திற்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தியது.

உலகமே உணவு, எரிபொருள் மற்றும் உர நெருக்கடியை எதிர்கொண்டபோதும், இந்தியா - ரஷ்யா நட்புறவு மற்றும் ஒத்துழைப்பால் எனது நாட்டு விவசாயிகளை உர நெருக்கடியை எதிர்கொள்ள நான் விடவில்லை. விவசாயிகளின் நலனுக்காக எங்கள் நட்பு பெரும் பங்காற்றியுள்ளது. அமைதியை மீட்டெடுக்க இந்தியா அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்க தயாராக உள்ளது. இந்தியா அமைதிக்கு ஆதரவாக உள்ளது என்பதை உங்களுக்கும் உலக சமூகத்திற்கும் உறுதியளிக்கிறேன். நேற்று என் நண்பர் புடின் சமாதானம் பற்றி பேசியதைக் கேட்டது எனக்கு நம்பிக்கையைத் தருகிறது. எனது ஊடக நண்பர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.