Skip to main content

''மணிப்பூர் முதலமைச்சரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை'' - அமித்ஷா திட்டவட்டம்

Published on 09/08/2023 | Edited on 09/08/2023

 

"There is no room for talk of changing the Chief Minister of Manipur" - Amit Shah's speech in Parliament

 

மோடி அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களவையில் காங்கிரஸ் சார்பில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார்.

 

இந்நிலையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்பொழுது பேசுகையில், “2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஊழலையும், வாரிசு அரசியலையும் பிரதமர் மோடி முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார். அறுதிப் பெரும்பான்மையுடன் மக்கள் எங்களை இரண்டு முறை தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களால் மிகவும் விரும்பப்படும் பிரதமராக மோடி திகழ்கிறார். ஊழல் மற்றும் வாரிசு அரசியலைத் தோற்கடித்து ஆட்சிக்கு வந்துள்ளோம். இப்பொழுது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் மக்களிடம் அச்சத்தை உருவாக்க கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசின் மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர்.

 

மக்களிடம் ஒரு மாயையை உருவாக்கவே இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். பிரதமர் மோடி ஆட்சியில் 11 கோடி கழிப்பறைகள் நாடு முழுவதும் கட்டப்பட்டுள்ளது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி அதிக பெண்கள் சமைக்கத் தொடங்கினார்கள். அரசியல் உள்நோக்கங்களுக்காக இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது'' என்றார்.

 

தொடர்ந்து மணிப்பூர் கலவரம் குறித்து அமித்ஷா பேசுகையில், ''மணிப்பூர் கலவரத்தை வைத்து அரசியல் செய்வதை அனுமதிக்க முடியாது. மணிப்பூரில் கலவரம் நடந்தது உண்மைதான். ஆனால் நடந்த கலவரத்தை யாரும் ஆதரிக்கவில்லை. பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோ வெளியான உடனே அரசு நடவடிக்கை எடுத்தது. மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண மெய்த்தி மற்றும் குக்கி சமூக மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே இதை வைத்து யாரும் அரசியல் செய்யக்கூடாது. மணிப்பூரில் தற்பொழுது வன்முறை குறைந்து வருகிறது. மணிப்பூரில் அமைதி நிலவ நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். மணிப்பூர் மாநில முதலமைச்சரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் கிரிக்கெட் வீரரும் பா.ஜ.க எம்.பியுமான கெளதம் கம்பீர் அதிரடி அறிவிப்பு!

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Former cricketer and BJP MP Gautam Gambhir action announcement

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்த நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான கவுதம் கம்பீர் டெல்லி கிழக்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் எம்.பி.யாக பொறுப்பு வகித்து வந்தார். இவர் இன்று (02-03-24) திடீரென்று அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து, கவுதம் கம்பீர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘வரவிருக்கும் கிரிக்கெட் பொறுப்புகளில் நான் கவனம் செலுத்துவதற்காக எனது அரசியல் கடமைகளில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று பா.ஜ.க கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவிடம் கோரிக்கை வைத்துள்ளேன். மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்ததற்காக பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

பா.ஜ.க முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு; பிரதமர் மோடி தொகுதி?

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
BJP preliminary list of candidates released

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அந்த வகையில், முதற்கட்டமாக 170 முதல் 190 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. உறுதி செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலை பா.ஜ.க பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே வெளியிட்டார். 

அந்த பட்டியலில், 34 மத்திய அமைச்சர்கள் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் 51 தொகுதிகளுக்கான பா.ஜ.க வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்தியப் பிரதேசத்தில் 24, மேற்கு வங்கத்தில் 20, குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 15 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க அறிவித்துள்ளது. இந்த முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 28 பெண்கள், 27 பட்டியலினத்தவர்கள், 18 பழங்குடியினர், 57 ஓ.பி.சி பிரிவினர்களின் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. முக்கியமாக 50 வயதுக்கு உட்பட்ட 47 பேருக்கு போட்டியிட பா.ஜ.க வாய்ப்பு அளித்துள்ளது. இந்த முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை.

நட்சத்திர வேட்பாளராக, வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த முறை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. காந்தி நகர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் போட்டியிடவுள்ளார். மலையாள நடிகரும் பா.ஜ.கவைச் சேர்ந்தவருமான சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மத்தியப் பிரதேசத்தின் குணா தொகுதியில் போட்டியிடுகிறார்.

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரத்தில் போட்டியிடுகிறார். ராஜஸ்தானின் கோட்டா தொகுதியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மீண்டும் போட்டியிடுகிறார். மதுராவில், நடிகையும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான ஹேமமாலினி மீண்டும் போட்டியிடுகிறார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி மீண்டும் போட்டியிடுகிறார். மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரான சிவ்ராஜ் சிங் சவுகான் விதிஷா தொகுதியில் போட்டியிடுகிறார்.