Skip to main content

“போலீஸா... அவங்க எனக்கும் மேல...” - திருடன் கொடுத்த அட்வைஸால் உஷாரான உரிமையாளர்

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

theif letter to sweet shop owner

 

பல இடங்களில் திருட வரும் நபர்கள் வீட்டில், கடைகளில் இருக்கும் பணத்தை திருடிவிட்டுச் செல்வதோடு, சாப்பாடு உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் இருந்து சாப்பிட்டு சாவகாசமாக திருடிச் செல்லும் சம்பவங்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ராஜஸ்தானில் சற்று வித்தியாசமாக ஒரு கடையில் திருடிவிட்டு கடையின் உரிமையாளருக்கு பாசமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்ற சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

 

ராஜஸ்தான் ஜெய்சல்மேர் மாவட்டத்தின் பானியான பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார் கோமாராம். கடந்த 23 ஆம் தேதி இரவு கடையைப் பூட்டி விட்டு அதே பகுதியில் இருக்கும் தனது வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அடுத்தநாள் வழக்கம்போல் தனது கடையைத் திறந்த கோமாராம் கடையில், இனிப்புகள் மற்றும் பொருட்கள் சிதறிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். கடைகளில் திருடப்பட்டதை உணர்ந்த கோமாராம், உடனே கல்லாப்பெட்டிக்கு சென்று பார்த்தபோது, அதில் வைக்கப்பட்ட பணம் திருடப்பட்டிருந்தது. மேலும் அதில் இரண்டு பக்கத்திற்கு கடிதம் ஒன்று இருந்துள்ளது. 

 

அந்தக் கடிதத்தில், “ஹலோ சார், நான் நல்ல உள்ளம் உள்ளவன். நான் உங்கள் கடைக்குள் திருடுவதற்காக வரவில்லை. என் ஆசையை நிறைவேற்றுவதற்காகவே நுழைந்தேன். உங்கள் கடையின் மேலிருந்து மூன்று செங்கற்களை அகற்றிவிட்டு உள்ளே நுழைந்தேன். நான் நேற்றிலிருந்து சாப்பிடவில்லை. கடுமையான பசி. நான் உங்கள் கடைக்கு பணம் எடுக்க வரவில்லை. பசியை போக்க வந்தேன். நீங்கள் ஏழை என்று எனக்குத் தெரியும். அதனால்தான் உங்களுக்கு ஆறுதல் சொல்ல இந்த கடிதத்தை எழுதுகிறேன். ஆனால் திருடும்போது எனது காலில் காயம் ஏற்பட்டது எனவே இதற்கும் பணம் செலுத்த வேண்டும். உங்களின் கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டேன். இரண்டு வெள்ளை இனிப்புகள் மற்றும் இரண்டு துண்டு அக்ரா பேத்தா தவிர வேறு எதுவும் உங்கள் கடையில் சாப்பிடவில்லை. நான் கடைசியாகச் சொல்ல விரும்புவது ஒன்று., காவல்துறையை அழைக்க வேண்டாம். அவர்களால் என்னை பிடிப்பதற்கு பதிலாக அவர்கள் உங்களிடமிருந்து பணம் பறிப்பார்கள். உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

 

இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இது குறித்து விசாரிக்க கடையின் உரிமையாளர் கோமாராம் திருடு குறித்து புகார் அளிக்க மறுத்துள்ளார். பாசக்கார திருடனின் செயலும், அதற்கு மதிப்பளித்த கடை உரிமையாளரின் செயலும் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'பட்டப்பகலில் கள்ளச்சாராய விற்பனை'-ஆர்ப்பாட்டத்தை அறிவித்த திருமாவளவன்

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
'Sale of adulterated liquor in broad daylight'-Vck announced the protest

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இறப்புகளின் எண்ணிக்கையும் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது.

இந்தச் சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய சோதனைகளைத் தொடங்கியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழப்பு 43 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கள்ளச்சாராயம் அருந்திய சம்பவம் தொடர்பாக 90-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கள்ளச்சாராய மரண சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தென் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

'Sale of adulterated liquor in broad daylight'-Vck announced the protest

ஏற்கனவே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவத்தை கண்டித்து அதிமுக போராட்டம் அறிவித்திருக்கும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வரும் 24ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, 'முழு மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி வரும் 24ம் தேதி சென்னையில் விசிக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. பலர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டப்பகலில் கள்ளச்சாராயம் விற்பனை ஆகிறது. இது அதிகாரிகளுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை. மெத்தனால் எளிதாக கிடைக்கும் பொருள் அல்ல, ஆனால் கள்ளச் சந்தையில் விற்பனை ஆகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

கள்ளச்சாராய மரணம்; உயிரிழப்பு எண்ணிக்கை 43 ஆக உயர்வு

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
counterfeiting liquor; The death toll rises to 43

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இறப்புகளின் எண்ணிக்கையும் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது.

இந்தச் சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய சோதனைகளைத் தொடங்கியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழப்பு 43 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கள்ளச்சாராயம் அருந்திய சம்பவம் தொடர்பாக 90-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கள்ளச்சாராய மரண சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தென் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக 50 க்கும்  மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.