Skip to main content

ரஃபேல் ஆதாரங்கள் வெளியானது எப்படி..? அதிரவைத்த மத்திய அரசின் பதில்...

Published on 06/03/2019 | Edited on 06/03/2019

 

ghcfghfcgh

 

ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்ய இந்தியா பிரான்ஸ் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இந்நிலையில் இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்து வருகிறது. அப்போது மத்திய அரசு சார்பில் வாதாடிய கே.கே.வேணுகோபால் கூறுகையில், "மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அலுவலகத்திலிருந்து ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன. அப்படி திருடப்பட்ட ஆவணங்கள்தான் அந்த ரஃபேல் ஆதாரங்கள். இதனை அரசு ஊழியர்களே யாரும் திருடியிருக்க கூடும், மேலும் அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது" என கூறினார். அவரின் இந்த பதில் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பாதுகாப்புத்துறை அலுவலகத்திலேயே திருட்டு நடந்துள்ளதாக கூறப்பட்டால், நாட்டின் நிலை என்ன என்று சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்