கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. பல மாவட்டங்களில் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதுவரை கேரளாவில் கனமழைக்கு 18 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் பல சாலைகள் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 1000-க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு 12.30 மணி அளவில் மூணாறு - டாப் ஸ்லிப் சாலையில் அமைந்துள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இரண்டு கடைகள் முழுமையாக சேதமடைந்தது. மலை மேல்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதும் அங்கிருந்த மக்களை கேரளா வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டு அருகில் உள்ள முகாமில் தங்கவைத்துள்ளனர்.
அதேபோல், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் 32 செ.மீ, மேல்பவானியில் 20 செ.மீ மழை பதிவாகியுள்ளது.